.

திங்கள், நவம்பர் 25, 2013

பிளாகர் ‘பின்பற்றுபவர்கள்’ (Blogger Follower widget) செயலி இப்பொழுது தமிழிலும்!


ரு பழைய கணக்கெடுப்பின்படி, தமிழில் மொத்தம் 9,578 பிளாகர் வலைப்பூக்கள் இருப்பதாகச் சொல்கிறார் தலைசிறந்த தமிழ் வலைப்பதிவர்களுள் ஒருவரான நீச்சல்காரன் அவர்கள். (பார்க்க: சொடுக்குக). ஆனால் நான் பார்த்த வரையில், தொண்ணூறு விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பிளாகர் வலைப்பூக்கள் ஆங்கிலத்தில்தான் இயங்குகின்றன. அதாவது, தளத்தில் எல்லாமே தமிழிலேயே இருந்தாலும் தளத்தின் மொழி அமைப்பு மட்டும் ‘ஆங்கிலம் என வைக்கப்பட்டிருக்கும். பதிவு எழுதப்பட்ட நாள், கருத்துகளின் எண்ணிக்கை ஆகியவை ஆங்கிலத்தில் இருப்பதை வைத்து இதைக் கண்டுபிடிக்கலாம். (பெரிய கண்டுபிடிப்பு!). 

தமிழில் எழுத வேண்டும் என விரும்பி முன்வந்திருக்கும் நம் பதிவுலகத் தோழர்கள் தங்கள் வலைப்பூ மொழியை மட்டும் ஆங்கிலத்தில் வைத்திருக்க முதற்பெரும் காரணம் பிளாகரின் ‘பின்பற்றுபவர்கள் செயலி (Blogger Follower widget) என அழைக்கப்படும் கூகுள் ‘நண்பர் இணைப்புச் செயலி (Google Friend Connect)!

சமூக வலைத்தளங்கள் வழியாகவும், திரட்டிகள் வாயிலாகவும் எத்தனை பேர் நம் வலைப்பூவைப் பின்தொடர்ந்தாலும் வலைப்பூவைப் பின்தொடர்வதற்கெனவே பிளாகர் வழங்கும் இந்தச் செயலி மூலம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கைதான் ஒரு வலைப்பூவின் அதிகாரப்பூர்வமான நேயர் எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது இன்றளவும். இதனால் இது பிளாகர் வலைப்பூக்களின் ஒரு மதிப்புக்குரிய அடையாளமாகிவிட்டது. மேலும், குறிப்பிட்ட வலைப்பூவை நண்பர்களுக்குப் பரிந்துரைத்தல், தான் தொடர்ந்து படிக்கும் மற்ற வலைப்பூக்களைப் பட்டியலிட்டுக் காட்ட இயலுதல் என மற்ற பின்தொடர்ச் செயலிகளில் இல்லாத சில வசதிகளும் இதில் இருக்கின்றன.

இப்படிப் பல வகைகளிலும் முதன்மை பெறுகிற, பிளாகர் வலைப்பூக்களின் அதிகாரப்பூர்வப் பின்தொடர்ச் செயலியான இதை, நம் வலைப்பூவின் மொழி அமைப்பு ஆங்கிலத்தில் இருந்தால்தான் வலைப்பூவில் இணைக்க முடியும் என நம்பப்படுவதுதான் மிகப் பெரும்பான்மையானோர் தங்கள் வலைப்பூ மொழியை ஆங்கிலத்தில் வைத்திருக்கக் காரணம்.

ஆனால், இந்த நம்பிக்கை தவறானது! ‘பிளாகர் பின்பற்றுபவர்கள் செயலி தமிழிலும் கிடைக்கிறது! Yes! Blogger Follower widget is available in Tamil also.

அண்மையில், ஓரிரு பிளாகர் வலைப்பூக்களில் இந்தச் செயலி தமிழில் காட்சியளித்ததைக் கண்டு வியந்தேன். (பார்க்க masusila.com). பிளாகருக்குள் தேடிப் பார்த்தேன். பெருவியப்புக்குரிய வகையில் கிடைத்தே விட்டது! இதோ இனி, எப்படி நம் வலைப்பூவில் இந்தச் செயலியைத் தமிழில் நிறுவலாம் எனப் பார்க்கலாம்.

௧] முதலில், உங்கள் தளத்தின் மொழியைத் தமிழுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். (எப்படி எனத் தெரியாதவர்கள் தொடர்ந்து படிக்கலாம். தெரிந்தவர்கள் நேரடியாக 6 (௬)ஆம் எண்ணுக்கு எகிறலாம்.)

௨] உங்கள் பிளாகர் கணக்குக்குள் நுழைந்து (Log in),  உங்கள் வலைப்பூவின் பெயரைச் சொடுக்கிப் பயனர் பலகைக்குச் (Dashboard) செல்லுங்கள்.

௩] இப்பொழுது ‘அமைப்புகள் (Settings) பிரிவைத் திறங்கள்.

௪] இப்பொழுது விரியும் பட்டியலில் ‘மொழி மற்றும் வடிவமைத்தல் (Language and Formatting) பிரிவைத் தேர்ந்தெடுங்கள்.

௫] இப்பொழுது திறக்கும் பக்கத்தின் உச்சியில் ‘மொழி (Language) என ஓர் உட்பிரிவு இருக்கும். அதைத் ‘தமிழ் என மாற்றிக் கொள்ளுங்கள். மறவாமல், ‘அமைப்புகளைச் சேமி (Save Settings) பொத்தானை ஓர் அழுத்து அழுத்திக் கொள்ளுங்கள்.

௬] அடுத்து, பிளாகரின் ‘தளவமைப்பு (Layout) பிரிவுக்குள் செல்லுங்கள்.

௭] வலைப்பூவின் எந்தப் பகுதியில் ‘பின்பற்றுபவர்கள் செயலியை வைக்க விரும்புகிறீர்களோ அந்தப் பகுதியில் இருக்கும் ‘கேஜெட்டைச் சேர் (Add Gadget) பொத்தானை அழுத்துங்கள்.

௮] இப்பொழுது திறந்திருக்கும் சாளரத்துக்குள் ‘மேலும் கேஜெட்கள் (More Gadgets) எனும் பிரிவைத் திறவுங்கள்.

௯] இப்பொழுது, அந்தப் பக்கத்தின் மேற்புறத்தில் ஒரு தேடல் பெட்டி வந்திருக்கிறதா? அதில் google friend connect எனத் தட்டெழுதித் தேடுங்கள்.

] இப்பொழுது மூன்று செயலிகள் உங்களுக்குக் காட்டப்படும். அவற்றுள் ‘உறுப்பினர்கள் (Members) எனும் செயலியைச் சொடுக்குங்கள்.

௧௧] இப்பொழுது செயலியின் தோற்ற விவரங்கள் (Showing details) காட்டப்படும். உயரத்தையோ, செயலியின் பெயரையோ மாற்ற விரும்பினால் மாற்றிக் கொண்டு ‘சேமி (Save) பொத்தானை அழுத்துங்கள்.

அவ்வளவுதான். இப்பொழுது உங்கள் வலைப்பூவுக்குச் சென்று பாருங்கள்! உங்கள் பிளாகர் ‘பின்பற்றுபவர்கள் செயலி தாய்மொழியாம் செந்தமிழில் அழகாக மிளிரும்! இனி, நீங்கள் மீண்டும் ‘தளவமைப்பு (Layout) பிரிவுக்குள் போய் உங்களது பழைய ‘பின்பற்றுபவர்கள் செயலியை நீக்கி விடலாம்.

தமிழில் மட்டுமில்லை, நீங்கள் உங்கள் வலைப்பூவை எந்த மொழியில் வைத்தாலும் அந்த மொழியில் இனி உங்கள் ‘பின்பற்றுபவர்கள் செயலி காட்சி தரும். இது மொத்தம் 47 மொழிகளில் மாறக்கூடியது!

இன்னும் என்ன தயக்கம்? உடனடியாக இந்தப் பன்மொழிச் செயலிக்கு மாறுங்கள்! நம் வலைப்பூக்கள் இனி முழுக்க முழுக்க நம் தாய்மொழியிலேயே மலரட்டும்!

எச்சரிக்கை: ௧! கூகுள் ஆட்சென்சு மூலமோ இன்ன பிற விளம்பரச் சேவைகள் மூலமோ நீங்கள் உங்கள் வலைப்பூவில் விளம்பரம் வெளியிடுகிறீர்கள் எனில், வலைப்பூவின் மொழியை ஆங்கிலத்திலிருந்து வேறு மொழிக்கு மாற்றுவது சிக்கலை ஏற்படுத்தலாம்!

எச்சரிக்கை: ௨! இந்தச் செயலியில் இப்பொழுது ஏதோ சிக்கல். சரியாக வேலை செய்யவில்லை. எனவே, இப்பொழுதுக்கு இதைப் படித்து மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்; செயல்படுத்த வேண்டா! சரியானதும் தெரிவிக்கிறேன். நன்றி! 

இற்றைத் தகவல் (Update): தித்திக்கும் செய்தி! இப்பொழுது வழக்கமான ‘பின்பற்றுபவர்கள்’ செயலியே (Normal Blogger Followers widget) தமிழில் கிடைக்கத் தொடங்கி விட்டது. பிளாகரின் ‘பின்பற்றுபவர்கள்’ செயலியை வலைப்பூவில் நிறுவ வேண்டுமானால் வலைப்பூவின் மொழியை ஆங்கிலத்தில்தான் வைத்திருக்க வேண்டும்; தமிழிலோ வேறு மொழியிலோ மாற்றி வைத்தால் அது மறைந்து விடுகிறது என்பதால்தான் இந்தப் பதிவில் அதற்கு மாற்றாக ‘கூகுள் நண்பர் இணைப்புச்’ செயலி (Google Friend Connect widget) பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், மேலே எச்சரிக்கை: ௨-இல் சொல்லப்பட்டபடி, இப்பதிவு எழுதப்பட்ட சில நாட்களிலேயே அந்தச் செயலி முடக்கப்பட்டு விட்டது. (இன்று வரை சரியாகவும் இல்லை.) ஆனால், அதற்குப் பதிலாக இப்பொழுது அனைவரும் பரவலாகப் பயன்படுத்தும் ‘பின்பற்றுபவர்கள்’ செயலியே (Followers widget) எல்லா மொழிகளிலும் கிடைக்கத் தொடங்கி விட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், சீனம், அரபி எனப் பல்வேறு மொழிகளிலும் தளத்தின் மொழியை மாற்றிச் சோதனை செய்ததில் இது எல்லா மொழிகளிலும் மாறுவது உறுதியானது. எனவே, இனி ‘கூகுள் நண்பர் இணைப்புச்’ செயலி தேவையில்லை. நீங்கள் ஏற்கெனவே ‘பின்பற்றுபவர்கள்’ செயலியை வலைப்பூவில் இணைத்திருந்தால், இப்பொழுது வலைப்பூவின் மொழியை மட்டும் தமிழுக்கு மாற்றினால் போதும்; உங்கள் ‘பின்பற்றுபவர்கள்’ செயலியும் தமிழில் மாறிவிடும். (வலைப்பூவின் மொழியை மாற்ற, மேலே கட்டுரையில் கூறப்பட்டுள்ள படிநிலைகளில் {steps} 1 {௧} முதல் 5 {௫} வரையான படிகளைச் செயல்படுத்த வேண்டும்!). ஒருவேளை, இன்னும் நீங்கள் இன்னும் ‘பின்பற்றுபவர்கள்’ செயலியைத் தளத்தில் இணைக்கவில்லை என்றால், பின்வரும் வழிமுறைகளைக் கடைப்பிடியுங்கள்.

௧] உங்கள் பிளாகர் கணக்குக்குள் நுழைந்து (Log in), உங்கள் வலைப்பூவின் பெயரைச் சொடுக்கிப் பயனர் பலகைக்குச் (Dashboard) செல்லுங்கள்.
௨] அடுத்து, பிளாகரின் ‘தளவமைப்பு’ (Layout) பிரிவுக்குள் செல்லுங்கள்.
௩] வலைப்பூவின் எந்தப் பகுதியில் ‘பின்பற்றுபவர்கள்’ செயலியை வைக்க விரும்புகிறீர்களோ அந்தப் பகுதியில் இருக்கும் ‘கேஜெட்டைச் சேர்’ (Add Gadget) பொத்தானை அழுத்துங்கள்.
௪] இப்பொழுது திறந்திருக்கும் சாளரத்துக்குள் ‘மேலும் கேஜெட்கள்’ (More Gadgets) எனும் பிரிவைத் திறவுங்கள்.
௫] அந்தப் பக்கத்தின் இறுதியில் ‘பின்பற்றுபவர்கள்’ (Followers) செயலி காணப்படும். அதைச் சொடுக்குங்கள்.
௬] செயலியின் நிறம், தோற்றம் ஆகியவற்றை உங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இப்பொழுது உங்களுக்குக் காட்டப்படும். விரும்பினால் மாற்றிக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் ‘Use template default styles’ (இயல்புநிலைப் பாணியைப் பயன்படுத்துக) எனும் வாய்ப்பைத் தேர்ந்தெடுங்கள்.
௭] இப்பொழுது ‘சேமி’ (Save) பொத்தானை அழுத்துங்கள்.
அவ்வளவுதான் உங்கள் தளத்தில் நீங்கள் வெற்றிகரமாக ‘பின்பற்றுபவர்கள்’ (Followers) செயலியை இணைத்து விட்டீர்கள். அப்பறம் என்ன? உடனடியாக உங்கள் தளத்தின் மொழியை மாற்றுங்கள்! நம் வலைப்பூக்கள் இனி முழுக்க முழுக்க நம் தாய்மொழியிலேயே மிளிரட்டும்! 
 
பி.கு: வலைப்பூவின் மொழியை மாற்றுவதால் பிளாகர் மொழியும் மாறிவிடுமோ என அஞ்சத் தேவையில்லை. வலைப்பூவின் மொழியை மாற்றுவது என்பது வேறு, பிளாகரின் மொழியை மாற்றுவது என்பது வேறு. இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு மேற்கண்ட படிநிலைகளை அப்படியே பின்பற்றினால்தான் இது செயல்படும். இது பற்றி எந்த ஐயம் இருப்பினும் கருத்துப்பெட்டி வழியேவோ தொடர்புப் படிவத்தின் வழியேவோ கேட்கலாம். பதிலளிக்கப்படும். தேவைப்பட்டால், முடிந்தால் பேசி வழி வழிகாட்டலும் அளிக்கக் காத்திருக்கிறேன்.

(நான் பிளாக்கர் நண்பன் வலைப்பூவில் எழுதிய கட்டுரை).

இந்தப் பதிவை மற்றவர்களுக்கும் பரப்பி, நம் தமிழ் வலைப்பதிவர்கள் பயனடைய நீங்களும் உதவலாமே!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

10 கருத்துகள்:

  1. அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
    விரிவாக புரிந்து கொள்ளும்படி எளிமையாக
    பதிவிட்டமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்!

      நீக்கு
  2. விரிவான விளக்கம் பலருக்கும் பயன் தரும்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  3. தலைவரே! தங்கள் வழிகாட்டுதல்படி google friend connect தளத்தில் செயல்படத்திவிட்டேன். தங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்!

      நீக்கு
  4. இத்தளத்தில் இணைக என்பது மட்டும் திறக்க மறுக்கிறது. நண்பரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மைதான் வலிப்போக்கன் அவர்களே! தளத்தைப் பின்தொடர்வதற்கான அந்தப் பொத்தானை அழுத்தினால், 'மன்னிக்கவும்... உங்கள் கோரிக்கையை எங்களால் கையாள முடியவில்லை. மீண்டும் முயற்சி செய்க அல்லது சிறிதுநேரம் கழித்து திரும்பி வருக' என்று பிழைச்செய்தி காட்டுகிறது. உங்களுக்கு மட்டுமில்லை, எனக்கும் அப்படித்தான் காட்டுகிறது. ஆனால், வழக்கமான 'பின்தொடர்' செயலியில் இந்தச் சிக்கல் இல்லை. இப்பொழுதுதான் இரண்டையும் சோதித்துப் பார்த்தேன். நான் இதைத் தளத்தில் நிறுவியபொழுது இந்தச் சிக்கல் இல்லை. இதுவரை 5 பேர் இந்தச் செயலி வழியே இத்தளத்தில் இணைந்திருக்கிறார்கள். எனவே, இது தற்காலிகமான சிக்கலாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். இரண்டு நாட்கள் காத்திருப்போம். சரியாகாவிட்டால் கூகுளிடம் முறையிடலாம். தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்