.

வெள்ளி, மே 17, 2019

இலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி? - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்

10th Memorial of Tamil Genocide

தமிழுலகினரே! ஈழத் தமிழ்ச் சொந்தங்களின் கண்ணீரைத் துடைக்க நாம் இதுவரை எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் மிக மிக முக்கியமான ஒரு முயற்சி இன்னும் மிச்சமிருக்கிறது என்பதே உண்மை! நடந்த தமிழினப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தருவதோடில்லாது தமிழீழ விடுதலைக்கும் திறவுகோலாக அமையக்கூடிய அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தித் தமிழினத் தலைவர்களுக்கு நான் அனுப்பிய மடல் இங்கே உங்கள் பார்வைக்கு! 
☟   ☟  
னிப்பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய உயர்திரு.திருமுருகன் காந்தி அவர்களுக்கு நேச வணக்கம்!

இனப்படுகொலை நடந்து இந்தாண்டோடு பத்தாண்டுகள் முடிவடைகின்றன. இன்னும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைத்தபாடில்லை. தாங்களும் ஐ.நா-வில் உரையாற்றுவது, உலக நாடுகளிடம் வலியுறுத்துவது போன்ற பல முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். அதற்காகத் தமிழன் எனும் முறையில் தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

இருப்பினும் இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய இன்னோர் இன்றியமையாத முயற்சி இன்னும் மிச்சமிருக்கிறது. அதைத் தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டு வரவே இதை எழுதுகிறேன்! எனவே அருள் கூர்ந்து இக்கடிதத்தை முழுமையாகப் படிக்க வேண்டுகிறேன்!


தலைவரே! ஈழ உணர்வாளர்களில் பெரும்பாலோர், ஒரு நாட்டின் மீது குற்றவியல் நடவடிக்கையை முன்னெடுக்க இன்னொரு நாட்டினால்தான் முடியும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் இலங்கை மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு இலட்சம் கையொப்பங்களைத் திரட்டிய நாடு கடந்த தமிழீழ அரசு கூட அதைப் பன்னாட்டு மனித உரிமை ஆணையத்தில் கையளித்தும் இங்கிலாந்து மூலமும் மட்டுமே வலியுறுத்தியதே தவிர அந்த நீதிமன்றத்தில் நேரிடையாகப் புகார் செய்ய முயன்றதாகத் தெரியவில்லை.

ஆனால், ஒரு நாட்டின் மீது வழக்குத் தொடுக்கத்தான் இன்னொரு நாடு முன்வர வேண்டுமே ஒழிய, புகார் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் சட்டம் சொல்லும் உண்மை!


இது குறித்துப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் சூழ்நிலைப் பகுப்பாய்வுத் தலைவர் திரு.எமரிக்கு உரோசர் அவர்கள் Justice Hub இணையத்தளத்துக்கு அளித்த சனவரி 6, 2015 நாளிட்ட செவ்வியில், “பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் தனி ஒரு மனிதர் கூடப் புகார் அளிக்க முடியும்” எனக் கூறியுள்ளதைக் கீழே உள்ள படத்தில் பாருங்கள்!
 

Even individuals can send complaints to the ICC for investigation - Emeric Rogier, Head of Situation Analysis, International Criminal Court

மேலே உள்ள படத்தில், யார் வேண்டுமானாலும் நடந்த குற்றங்கள் பற்றித் ‘தகவல்களை அனுப்பலாம்’ என்றுதானே குறிப்பிடப்பட்டிருக்கிறது என எண்ண வேண்டா! இவ்வாறு அனுப்பப்படும் குற்றம் பற்றிய தகவல்கள் படிப்படியான பரிசீலனைகளுக்குப் பிறகு இறுதியில் உசாவலுக்கு
(விசாரணை) எடுத்துக் கொள்ளப்படும் என்றும், அதற்குத் தகவல்களை எப்படி அனுப்ப வேண்டும், எப்படி அவை பரிசீலிக்கப்படும் என்பவை குறித்தும் எல்லா விவரங்களையும் அவர் அந்தச் செவ்வியில் கூறியுள்ளார். அதன் இணைப்பு இங்கே -> https://justicehub.org/article/how-can-people-report-crimes-to-the-icc/

தவிர, இந்தப் பரிசீலனையின் தொடக்கம் முதல் நிறைவு வரையிலான செயல்முறை (process) பற்றிய விளக்கப் படத்தையும் அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அஃது உங்கள் மேலான பார்வைக்குப் பின்வருமாறு:

The process of the complaints received by International Criminal Court

ஆக, நம்ப முடியாததாக இருந்தாலும் இதுதான் உண்மை ஐயா! இலங்கை மீது பன்னாட்டுக் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள ஐ.நா., மனித உரிமை ஆணையம், உலக நாடுகள் என எதன் உதவியும் நமக்குத் தேவையேயில்லை; தமிழர்கள் நாமே அதைச் செய்ய முடியும் என்பதுதான் பெருமகிழ்ச்சிக்குரிய செய்தி!

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் என்பது நாடுகள் மீதான மனித உரிமை மீறல், இனப்படுகொலை போன்ற குற்றச்சாட்டுகளை உசாவும் (விசாரிக்கும்) அமைப்பு என்பது தாங்கள் அறிந்ததே. அப்பேர்ப்பட்ட நீதிமன்றத்தில் மேலே அவர் கூறியுள்ளபடி தனி மனிதர், குழு, அமைப்பு என யார் வேண்டுமானாலும் புகார் செய்ய முடியும் எனும்பொழுது தமிழினப்படுகொலைக்கு நீதி பெற இதை விடச் சிறந்த வாய்ப்பு நமக்கு வேறு எதுவுமே இருக்க முடியாது ஐயா!

எனவே, இனியும் ஐ.நா-வையோ மனித உரிமை ஆணையத்தையோ நம்பிக் கொண்டிராமல் இனப்படுகொலை குறித்து மே பதினேழு இயக்கமே நேரிடையாக நீதிமன்றப் புகாரளிக்க வேண்டும் என்பதே என் கோரிக்கை! நாம் யாரும் இன்னும் செய்யாத ஒரே முயற்சியான இதையும் முயன்று பார்த்து விட வேண்டும் என்பதே என் பணிவன்பான வேண்டுகோள்!

இதனால் தமிழினத்தை அழித்த இனவெறியர்களுக்குத் தண்டனை கிடைக்கிறதோ இல்லையோ, நடந்தது இனப்படுகொலைதான் என்பதும், அதை நடத்தியது இலங்கை அரசுதான் என்பதும் கண்டிப்பாக மெய்ப்பிக்கப்படும். அது மட்டும் நடந்து விட்டால் போதும். அந்தத் தீர்ப்பை வைத்தே நாம் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பைக் கோரலாம்.

“சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் நாடு என நீதிமன்றத்தாலேயே உறுதி செய்யப்பட்ட ஒரு நாட்டில் அந்த மக்கள் எப்படி வாழ முடியும்?” என ஐ.நா., அவையில் நாம் குரல் உயர்த்திக் கேட்கலாம்.

“இப்படிப்பட்ட ஓர் அரசமைப்பிடமிருந்து அந்த மக்கள் விடுதலை கோருவதில் என்ன தவறு?” என உலக நாடுகளின் முகத்துக்கு நேராகக் கேள்வி எழுப்பலாம். ஐ.நா-வின் அமைப்புகளுள் ஒன்றான பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகு எவனும்/எவளும் நம்மை எதிர்த்துப் பேச முடியாது. அதன் பின் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என எதன் உதவியும் நமக்குத் தேவையும் கிடையாது.

ஆம் ஐயா, தமிழர்கள் எனும் ஒரே காரணத்துக்காகவே துள்ளத் துடிக்கக் கொன்று குவிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நீதி கிடைக்க மட்டுமில்லை, அவர்களுக்காகப் போராடித் தங்கள் இன்னுயிரை ஈந்த புலிகளின் தாகமாம் தமிழீழக் கனவு நிறைவேறவும் இதுதான் ஒரே வழி! பதைக்கப் பதைக்க நம் கண்ணெதிரிலேயே பலி வாங்கப்பட்ட நம் சொந்தங்களுக்கு இதுதான் நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியும் கூட!

எனவே அருள் கூர்ந்து தாங்கள் இதைச் செய்ய முன்வர வேண்டும்; தமிழர்க்கான நீதியைத் தமிழர்களான நாமே வென்றெடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்! 

நன்றி! வணக்கம்! 

இப்படிக்கு,
தமிழ் உணர்வாளன்
E.Bhu.Gnaanapragaasan
[இ.புஞானப்பிரகாசன்]
* * * * *
படி பெறுநர்:
1. ம.தி.மு.க., தலைவர் வைகோ அவர்கள் 
2. நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் 
3. பசுமைத் தாயகம் நிறுவனர் மரு.இராமதாசு அவர்கள்
❀ ❀ ❀ ❀ ❀
(நான் திருமுருகன் காந்தி அவர்களுக்கு எழுதி மேற்கண்ட இன்ன பிற தமிழினத் தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்)
படம்: நன்றி பிரித்தானியத் தமிழர் பேரவை, Justice Hub.

தொடர்புடைய பதிவுகள்:
மாவீரர் திருநாள் – நாம் செலுத்த வேண்டிய உண்மையான அஞ்சலி இதுதான்! 
தமிழினப் படுகொலை எட்டாம் ஆண்டு நினைவேந்தலும் நீதிக்கான புதிய வாய்ப்பும்!
தமிழினப் படுகொலை ஏழாம் ஆண்டு நினைவேந்தல் - செய்ய வேண்டியவை என்ன? 

கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்குவதன் மூலமாக இந்தக் கோரிக்கை பரவவும் நிறைவேறவும் நீங்களும் உதவ முடியும். செய்வீர்களா?

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

முகநூல் வழியே கருத்துரைக்க

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மிக்க நன்றி! உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த வரவேற்பைத் தெரிவித்து மகிழ்கிறேன். மேற்படி பதிவில் கூறப்பட்டுள்ள தீர்வு உங்களுக்குச் சரி எனத் தோன்றினால் அதன் கீழே உள்ள வாக்குப்பட்டைகளைச் சொடுக்குவதன் மூலம் அதைப் பரப்பி யாராவது அந்த நடவடிக்கையை மேற்கொள்ள உதவுங்கள்! அல்லது முடிந்தால் நீங்களே மேற்படி தலைவர்களின் பார்வைக்கு அதை எடுத்துச் சென்று அந்த நடவடிக்கையை அவர்கள் மேற்கொள்ள வலியுறுத்துங்கள்! நன்றி!

      நீக்கு

பதிவர் பரிந்துரை

’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு

பார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...

தொடர...

மின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓

அனுப்புநர்:FeedBurner

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

அ.தி.மு.க (7) அஞ்சலி (20) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (67) அழைப்பிதழ் (5) அன்புமணி (1) அனுபவம் (26) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (20) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இனப்படுகொலை (14) இனம் (44) ஈழம் (36) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (5) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (7) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காங்கிரஸ் (5) காவிரிப் பிரச்சினை (6) கீச்சுகள் (2) குழந்தைகள் (7) குறள் (1) கூகுள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (12) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (6) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (17) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (10) தமிழர் (35) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (2) தாலி (1) தி.மு.க (6) திரட்டிகள் (3) திராவிடம் (3) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியம் (10) தேர்தல் (8) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நிகழ்வுகள் (1) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (14) பா.ம.க (2) பா.ஜ.க (18) பார்ப்பனியம் (9) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (6) பீட்டா (1) புனைவுகள் (10) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (3) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (1) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (1) மேனகா காந்தி (1) மோடி (7) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) வரலாறு (16) வாழ்க்கைமுறை (12) வாழ்த்து (3) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (5) வை.கோ (4) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)

முகரும் வலைப்பூக்கள்