ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மீதான தடையால் புண்பட்டுப் போயிருக்கின்றன தமிழ் அன்புள்ளங்கள்! இருக்கிற கொந்தளிப்பைப் பார்த்தால் பலர் இந்த முறை பொங்கலே கொண்டாடாமல் விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது! அப்படி ஏதேனும் எண்ணம் இருந்தால் அருள் கூர்ந்து மாற்றிக் கொள்ளுங்கள் தமிழர்களே! காரணம், அது நம் எதிரிகளுக்குத்தான் வெற்றி!
பீட்டா (PETA) போன்ற விலங்கு நல அமைப்புகளும் மற்றுமுள்ளோரும் ஏறு தழுவலைத் தடை செய்ய இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்குப் பின்னணியில் பல வணிகக் காரணங்கள் இருப்பதாகத் தகவல்கள் கசிந்து வருவது உண்மைதான். அவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தமிழர் மரபு - பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் நோக்கமும் இதனுள் இருப்பது நாம் அறியாததில்லை. எனவே, ஏறு தழுவல் எனும் ஒரு மரபு அடையாளத்துக்காக நாம் பொங்கலையே தவிர்த்தால் தமிழர் திருநாள், உழவர் பண்டிகை, தமிழ்ப் புத்தாண்டு முதலான இன்ன பிற அடையாளங்களையும் நாமே விட்டுக் கொடுத்ததாக ஆகி விடும் தோழர்களே! தமிழ் இன அடையாளங்களை அழிக்கத் துடிக்கும் அற்பர்களுக்கு இது மேலும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாகத்தான் இருக்கும்.
ஆகவே, முன்னெப்பொழுதையும் விட இந்தாண்டுப் பொங்கலை இன்னும் சிறப்பாகக் கொண்டாடுவோம்! ஏறு தழுவல் எங்கும் போய்விடாது. அதற்கான ஒப்புதல் கிடைக்கும்பொழுது கிடைக்கட்டும்! அதற்காக மற்ற அடையாளங்களை நாமே அழித்துக் கொள்ள வேண்டா!
தமிழ்ப் பகைவர்களின் மருள் நெஞ்சை அடுப்பாக்கி
அவர்தம் வயிற்றெரிச்சலையே நெருப்பாக்கி
எதிரிகளின் காதுகள் செவிடுபடக் குலவையிட்டு
ஏறுதழுவல் குறித்த விழிப்புணர்வை உலகுக்கே படையலிட்டு
தமிழர் இல்லந்தோறும் பொங்கல் பொங்கட்டும்!
தமிழ் மரபின் சிறப்புக்கள் ஒளிருக திக்கெட்டும்!
போகி, பெரும் பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் திருநாள்,
தமிழ்ப் புத்தாண்டு, காணும்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
படங்கள்: நன்றி ஜல்லிக்கட்டு Jallikattu, நகர்முரசு,
பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
2016 தைப்பொங்கல் நாளில்
பதிலளிநீக்குகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
மிக்க நன்றி ஐயா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோருக்கும் என் அன்பார்ந்த பொங்கல், மாட்டுப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
நீக்குவணக்கம் நண்பரே..
பதிலளிநீக்குகொண்டாடவேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் முடியவில்லையே. இந்த தடை, பண்டிகை நாளன்று இல்லத்தில் இழவு விழுந்தததை போல் அல்லவா மனதை மாற்றியுள்ளது.
பதிவிற்கு நன்றி. பொங்கல் வாழ்த்துக்கள்.
ஐயா! உங்களைப் போல் இப்படி எத்தனை பேர் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறீர்கள் என்பதை அறிவேன். அதற்காகத்தான் இப்படி ஒரு பதிவு. நம் சோர்வு நம் எதிரிகளுக்கு மேலும் வெற்றியை அளித்துவிடக்கூடாது என்பதற்காகவாவது பொங்கலை அவர்கள் வயிறெரியக் கொண்டாடுவோம் ஐயா!
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோருக்கும் என் அன்பார்ந்த பொங்கல், மாட்டுப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோருக்கும் என் அன்பார்ந்த பொங்கல், மாட்டுப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
நீக்குதமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோருக்கும் என் அன்பார்ந்த பொங்கல், மாட்டுப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
நீக்குஅகச்சிவப்பு தமிழர்க்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மற்றும் சிவப்பு தமிழரின் அன்பு நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குஆகா! மிக்க நன்றி ஐயா! வலிபோக்கும் வல்லவருக்கும் அவர்தம் குடும்பத்தினர், நண்பர்கள், வலைப்பூ நேயர்கள் ஆகியோருக்கும் அன்பார்ந்த பொங்கல், மாட்டுப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
நீக்குத.ம்2
பதிலளிநீக்குஉண்மைதான் சகோ. நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து மிகவும் சரியே. உழவர் திருநாள் என்பது மிக மிக முக்கியம். அவர்கள் இல்லை என்றால் நாம் எல்லாம் எங்கே செல்லுவது...உழவுக்கும் உழவருக்கும் வந்தனை செய்வோம். செய்தோம்.
பதிலளிநீக்குஇசைவான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா, அம்மணி! ஆனால், அப்பேர்ப்பட்ட உழவர் திருநாளை இன்று உழவர்களே தவிர்த்து விடுவார்களோ என்று அஞ்சியே இந்தப் பதிவு. அன்பார்ந்த பொங்கல், மாட்டுப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
நீக்குவிவசாயத்தை அழிக்க என்னென்ன முடியுமோ அவ்வளவையும் செய்கிறார்கள். இப்போ மாட்டை நம்மிடம் இருந்து பிரிக்கிறார்கள். இது என் recent fb status உழுத மாட்டுக்கு நன்றி சொல்லத்தானே மாட்டுப்பொங்கல்?? அம்புட்டு நியூஸ் ளையும் பசுமாட்டுக்கு பூஜை செய்வதாய் காட்டுகிறார்கள். அட, இதுகூட சோசியல் மேட்டர் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்....நந்திக்கு லட்டு, ஜாங்கிரி படைப்பதாய் கட்டுகிறார்கள். ஹ்ம்ம்.... பீட்டா மக்களே இப்போ திருப்தியா?
பதிலளிநீக்குமிகச் சரியாகச் சொன்னீர்கள் சகோ! நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்; ஏறு தழுவல் விவகாரத்தில் பா.ச.க கொஞ்சம் ஆர்வம் காட்டியதோ இல்லையோ, உடனே இதற்கு இந்து சமயச் சாயம் பூசத் தொடங்கி விட்டார்கள். கேட்டால், விளையாட்டின்பொழுது முதலில் கோயில் காளைதான் விடப்படுகிறது, கோயிலுக்குக் காளைகளை அழைத்துப் போய்க் கடவுளைக் கும்பிட்டு விட்டுத்தான் ஏறுதழுவலைத் தொடங்குகிறார்கள் எனவெல்லாம் காரணம் காட்டுகிறார்கள். நல்லவேளை, பொங்கலுக்கு எப்பொழுதும் கதிரவனுக்குத்தான் படையல் இடுகிறார்கள்; எனவே, தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருமே தி.மு.க வாக்காளர்கள்தான் எனச் சொல்லாமல் விட்டார்களே! அந்த வரைக்கும் தப்பித்தோம்!
நீக்குஆனால், பீட்டாவுக்கு இத்தோடு நிறைவு கிடைக்காது சகோ! அவர்கள் கணக்கு வேறு. அது வணிகமும், தமிழ் சமூகத்தையே கையேந்த வைக்கும் உணவு அரசியலும் பின்னணியாய்க் கொண்டது. அந்த நோக்கம் நிறைவேறும் வரை அவர்கள் ஓயப் போவதில்லை.
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குதங்களது கவிதை கொதிக்கிறது.
எனக்கு இப்பொழுதெல்லாம் அடிமை மனோபாவத்திற்குத் தமிழர்கள் பெரிதும் பழகிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.
காலம் மாறட்டும்!
நன்றி.
கவிதை பற்றிய பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா! ஆனால், எனக்கென்னவோ அடிமை மனப்பான்மை அண்மைக்காலமாகப் பெரிதும் தகர்ந்து விட்டதாய்த் தோன்றுகிறது. தமிழினப் படுகொலைக்கு முன்பு வரை பொதுவாக, போராட்டம் - இனம் - மொழி எனவெல்லாம் பேசுவதையே கீழ்ப் பார்வையில் பார்ப்பார்கள். ஆனால், இப்பொழுது மக்கள் பெரிதும் மாறியிருக்கிறார்கள்.
நீக்குமிக்க நன்றி! வணக்கம்!