.

பற்றி...ஏன் இது ‘அகச் சிவப்புத் தமிழ்?

காரணங்கள் பல...கோபத்தின் நிறம் சிவப்பு

இது, ஈழத் தமிழுணர்வாளன் ஒருவனின் கோபம் சொல்வது!இரத்தத்தின் நிறம் சிவப்பு

இது, உலக மக்கள் அனைவரையும் உடன்பிறப்புக்களாய் நினைப்பவன் தன் இரத்தத்திலிருந்து எழுதுவது!காதல் சின்னம் சிவப்பு

இது, தமிழ் மீது கொண்ட காதலால் மலர்ந்தது!வீரத்தின் நிறம் சிவப்பு

இது, தமிழர்தம் புறத்திணைப் பெருமை பேசுவது!வெட்கத்தின் நிறம் சிவப்பு

இது, சமயத்தில் அகத்திணை மணமும் வீசுவது!எச்சரிக்கையின் நிறம் சிவப்பு

இது, சமூக ஆர்வலன் ஒருவன்

சக மனிதர்களுக்காக நடும் எச்சரிக்கைப் பலகை!நெருப்பின் நிறம் சிவப்பு

இது, நீதியை நிலைநாட்ட மதுரையை எரித்தது போக

மிச்சமிருந்த தீயில்

தொட்டு எழுதும் பதிவு!பொதுவுடைமையின் நிறம் சிவப்பு

இது, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க

விருப்பு கொண்ட ஒருவனின்

சிவப்பு முனைப்பு!‘செம்மை என்றால் சிவப்பு

இது, செம்மையானவற்றை மட்டுமே வழங்க வேண்டும் எனும்

எண்ணத்தின் வண்ணம்!பிழை சுட்டும் நிறம் சிவப்பு

இது, உலகத்தைப் பிழை திருத்த

ஓர் அடிக்கோட்டு முயற்சி!அதே நேரம்,

பிஞ்சுக் குழந்தைகளின் கனி வாய் சிவப்பு

இது, அதுபோல் வளரும் எழுத்தாளன் ஒருவனின் மழலைமொழி!அகச் சிவப்புக் கதிர்கள் சிவப்பு

இது, அவை போல் தெரிந்தும் மறைந்தும்

ஊடுருவியும் கடந்தும்

தன் கருத்துக்கள் பரவ வேண்டும் எனும்

விழைவின் வெளிப்பாடு!விடுதலைப்புலிகளின் கொடி சிவப்பு

இது, அவர்கள்தம் ஆதரவாளனின் இணையமுகம்!எல்லாவற்றுக்கும் மேலாக,

தமிழின் நிறமே சிவப்பு!

இருபத்தோராம் நூற்றாண்டுப் புலவனொருவன்

புகன்றது போல்

‘செம்மொழி என்பதால் மட்டுமில்லை,

காலங்காலமாகப் பலர்

-அண்மையில் கூட ஒன்றரை இலட்சம் பேர்-

இந்த மொழிக்காக

உயிரைக் கொடுத்திருப்பதாலும்தான்!ஆதலினால்,

இது ‘அகச் சிவப்புத் தமிழ்!

2 கருத்துகள்:

 1. ஐயா ,
  என் மகனைப் பற்றி தெரிந்திருந்தமைக்கு நன்றி.எத்தனையோ திட்டங்களுடன் கனவுகளுடன் இருந்த மகன் விபத்து என்ற வார்த்தையில் என்னை விட்டு ஒரு நிமிடத்தில் பிரிந்து விட்டான்.9 வருடங்கள் கடந்தும் நெருப்பில் இட்ட புழுவாய் ஒவ்வொரு நிமிடமும் துடித்துக் கொண்டிருக்கிறேன்.அந்த 23 வருடங்களிலேயே அவன் செய்த சாதனைகள் அதிகம்.அதை அவன் ரெசுமே படித்தால் புரியும்.உங்களைப் போன்றோர் அவன் பற்றி ஒரு சொல் சொன்னாலும் அது எனக்கு அளவு கடந்த ஆனந்த்தத்தை தருகிறது.தங்கள் மேல அல்லது தொலைபேசி என் தந்தாள் நான் அவன் பற்றி ,வரலாறு சம்பந்தப்பட்ட அவன் எழுதிய மற்ற வையும் அனுப்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய அம்மா!

   உங்கள் வேதனையை என்னால் உணர முடிகிறது. பெற்ற பிள்ளை குழந்தைப் பருவத்திலேயே நம்மைப் பிரிந்து விட்டாலோ, அல்லது நன்கு வளர்ந்து, மணமாகி, குழந்தை குட்டி எல்லாம் பெற்று வயதான பின் நமக்கு முன்னால் போய்விட்டாலோ அந்த இழப்பை நம்மால் ஓரளவாவது தாங்க முடியும். ஆனால், வாழ வேண்டிய வயதில் பிள்ளை நம்மை விட்டு மறைந்து விட்டால் அது கொடுமை! அந்தத் துக்கம் அளவற்றது.

   வரலாறு.காம் உண்மையிலேயே ஒரு கருவூலம்! அதைப் படைத்ததற்காக உங்கள் பிள்ளையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நான் உரைத்த ஒரு சிறு பாராட்டை மதித்து, என் வலைப்பூ தேடித் தொடர்புகொண்டு என் முகவரியை நீங்கள் கேட்பதற்கு நன்றி! என் மின்னஞ்சல் முகவரி e.bhu.gnaanapragaasan@gmail.com. என் பேசி எண்: 9043585723. நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

   நீக்கு

பதிவர் பரிந்துரை

’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு

பார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...

பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (8) அஞ்சலி (19) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (83) அழைப்பிதழ் (6) அற்புதம்மாள் (1) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (33) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இட ஒதுக்கீடு (4) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (24) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (2) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (18) இனம் (44) ஈழம் (40) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (23) ஐ.நா (5) ஒருங்குறி (1) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (9) கவிஞர் தாமரை (1) கவிதை (16) காங்கிரஸ் (6) காணொளி (3) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (8) குறள் (1) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (7) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (10) சமற்கிருதம் (1) சமூகநீதி (4) சாதி (9) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (25) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (13) தமிழர் (42) தமிழர் பெருமை (14) தமிழின் சிறப்பு (2) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (3) தாலி (1) தி.மு.க (10) திரட்டிகள் (4) திராவிடம் (7) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (9) நிகழ்வுகள் (1) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (9) நீட் (4) நூல்கள் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (9) பதிவுலகம் (19) பா.ம.க (2) பா.ஜ.க (28) பார்ப்பனியம் (13) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (8) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரறிவாளன் (1) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) போராட்டம் (9) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மணிவண்ணன் (1) மதிப்புரை (1) மதுவிலக்கு (1) மருத்துவம் (6) மாவீரர் நாள் (1) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (6) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (2) மேனகா காந்தி (1) மொழியரசியல் (1) மொழியறிவியல் (1) மோடி (11) யுவர் கோட் (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (21) வாழ்க்கைமுறை (14) வாழ்த்து (4) வானதி சீனிவாசன் (1) விடுதலை (4) விடுதலைப்புலிகள் (11) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (5) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (1) Hindu (1) Karnataka (1) Manisha (1) Modi (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்