.

செவ்வாய், மார்ச் 13, 2018

பெண்ணியம் - இது திருக்குறளில் இல்லாத புதிய அதிகாரம்!

Feminism Couplets

பால்: பொதுப்பால்                                                                                                                                                  இயல்: உரிமையியல்
அதிகாரம் 
பெண்ணியம்

கற்க கசடற அதுமட்டும் போதாது
நிற்க எவரையும் எதிர்த்து!
 

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பெல்லாம்
 துச்சமாய்த் தூக்கி எறி!

ஒப்பனைப் பொருட்களிலே நேரம் போக்காமல்
ஒப்பற்ற நூல்களை நாடு!

பணியின் பொருட்டன்று கற்றல் துணிவுடன்
சமூகச் சிறுமைகள் மிதி!

பெண்ணியம் போற்றுதல் என்பதே ஆணின்
கண்ணியம் என்றுநீ சாற்று!

கண்நிறைந்த ஒருவனைக் காதலிக்க விடாமல்
பெண்ணுரிமை என்ன மயிர்க்கு?

விருப்பப்படி வாழவிடா விடுதலை காலின்
செருப்பென மிதிக்கப் படும்!

கற்றதனாலான பயனென் சொல் மனைவியை
உற்றதோழியாய் நடத்தா விடில்?

பெண்மதித்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
மண்ணடித்த சிலையா னவர்!

பெண்ணுயர மாத்திரமா பெண்ணியம் அதுவே
மண்ணுயிர்க் கெலாம் இனிது!


[கடந்த ஆண்டு, உலக மகளிர் திருநாளை ஒட்டி ‘இந்திய சனநாயக மாதர் சங்க மாநாட்டு அரங்க’த்தில் காட்சிக்கு வைக்கக் கவித்துவமான வரிகள் அனுப்புமாறு நம் பெருமதிப்புக்கும் பேரன்புக்கும் உரிய ஐயா முத்துநிலவன் அவர்கள் பதிவுலகத் தோழர்கள் அனைவரையும் கேட்டிருந்தார்கள். மகளிர் திருநாள், தாய்மொழித் திருநாள் போன்ற எந்தச் சிறப்பு நாளையும் பன்னாட்டு அளவில் அல்லது இந்திய அளவில் கடைப்பிடிப்பதில் அடிப்படையில் எனக்கு உடன்பாடு கிடையாது. இப்படிப்பட்ட நாள்கள் ஒவ்வோர் இனத்திலும் அந்தந்த இனத்துக்கே உரிய தனித்தன்மையான நாள்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது என் நிலைப்பாடு. ஆனால், ஐயா அவர்களின் அந்த அழைப்புக்காக எழுத முனைந்தேன். ஓரிரு வரியில் கவிதை என்றாலே நம் நினைவுக்கு வருவது திருக்குறள்தானே! அதனால் குறள் பாணியிலேயே பத்துக் கவிதைகள் எழுதி அனுப்பினேன். உலக மகளிர் திருநாளுக்கு எழுதியதை அதே நாளில் வெளியிடுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதால், இந்த ஆண்டு அதே படைப்பு இதோ உங்கள் அன்பான பார்வைக்கு!]

இற்றை (Update)-1: இது குறள் வடிவத்தில் பெண்ணியக் கருத்துக்களைச் சொல்லும் இரு வரிக் கவிதை முயற்சி மட்டுமே! மற்றபடி, இது முறையான குறள் வெண்பா கிடையாது. குறள் வெண்பா இலக்கணத்துக்கும் இதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.
❀ ❀ ❀ ❀ ❀ 
தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்!

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

முகநூல் வழியே கருத்துரைக்க

20 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. ஓ! மிகப் பெரிய வார்த்தை ஐயா! தலை வணங்குகிறேன். மிக்க மகிழ்ச்சி! மிகவும் நன்றி!

   நீக்கு
 2. பெண்களுக்காகப் புதுக்குரல்! புதுக்குறள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைப் புதுக்குறளாகவே ஏற்றுக் கொண்ட தங்கள் பெருந்தன்மைக்கு நன்றி ஐயா! மிக்க மகிழ்ச்சி!

   நீக்கு
 3. அருமையான எண்ணங்கள்
  பெருமையோடு பகிரலாம்
  சிறந்த பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அடுக்கடுக்கான பாராட்டுக்களுக்கு மிக மிக நன்றி ஐயா! மிக்க மகிழ்ச்சி!

   நீக்கு
 4. தோழமைக்குரிய இ.பு.ஞா.அவர்களுக்கு வணக்கம்.
  தங்களின் பெரும்பாலான கருத்துகளோடு உடன்படுவது மட்டுமில்லாமல், சொல்ல வருவதைத் துணிந்து சொல்வதும் அதையே துல்லியமான சொற்களில் சொல்வதுமான தங்கள் பாணி என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது என்பதைச் சொல்வதில் பெருமைப் படுகிறேன்.
  ஒரு குறை அதுவும் பெரிய குறை (ஏற்கெனவே நண்பர் ஒருவரும் இதைச் சொல்லிவிட்டார்) குறள் என்று வந்தால் அதன் இலக்கணம் பொருந்தி வர வேண்டும். மாதிரி என்பதையெல்லாம் நான் ஏற்கவில்லை.
  கட்டித் தங்கத்தை நெகிழித்தாளிலா கட்டித் தருவது? என்னதான் விலை உயர்ந்தது எனினும் செருப்பைத் தலையில் வைக்க முடியாதில்லையா? (உதாரணத்திற்காகச் சொன்னேன், இதையே பிடித்துக் கொள்ள வேண்டா, இலக்கியப் படைப்புக்கு உருவம், உள்ளடக்கம் இரண்டும் முக்கியம்!)
  உருவம், உள்ளடக்கம் என்பது கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம் எனும் படைப்புகளுக்கே தேவை எனும் போது, இலக்கியத்தின் தாய்மடியாகிய கவிதைக்கு வேண்டாமா? இல்லையேல் புதுக்கவிதை சரியானது தானே?
  ஏற்கெனவே எழுத்தாளரும் அரசுஊழியர் சங்கத் தலைவர்களில் ஒருவருமான எனது நண்பர், பெரணமல்லூர் சேகரன் அவர்கள் இப்படி ஒரு நூலையே வெளியிட்டிருக்கிறார். அது, மதுரையிலிருந்து வெளிவரும் “புதிய ஆசிரியன்” இதழில் வெளிவந்த போதே, “இப்படிச் செய்யக் கூடாது! புதுக்கவிதையில் எழுத வேண்டியது தானே? குறள் என்று –வடிவம் கருதி- வெளியிட்டால் அதன் இலக்கணத்தை அறிந்து, அதில் எழுதுவதுதான் பொறுப்பான பணி. இல்லையேல் நா வழக்குமன்றத்திற்குப் போவேன்!” என்று அந்த ஆசிரியர் குழுவினர்க்கு எழுதப்போய், அதிலிருந்து அந்த ஆசிரியர் குழுவினரும் நண்பர் பெரணமல்லூர் சேகரனும் என்னிடம் பேசுவதில்லை! நான் என்ன செய்ய? (விளையாட்டு வினையாகிவிட்டது!)
  உங்களிடம் தொடர்ந்து நான் நட்பாக இருக்க விரும்புவதாலேயே இந்த விமர்சனத்தை முன்வைக்கிறேன். தவறாக எண்ணினால் மன்னியுங்கள். குறளின் வடிவம் உங்களைக் கவர்ந்திருந்தால், அந்த வடிவத்திற்கான இலக்கணத்தைக் கற்றுக் கொள்வதொன்றும் பெரிதில்லை! அல்லது குறள் வடிவத்தை விட்டுவிட வேண்டும். அரைகுறைப் படிப்பாளிகளோ, அல்லது வெளிநாட்டாரோ இப்படித் தொடர்ந்தால் அந்தப் பழி உங்களை வந்து சேரவேண்டுமா என்ன? மற்றபடி மகளிர்க்கான கருத்துகளை மண்டையில் அடித்துச் சொல்லியிருக்கும் கருத்துகளுக்காக உங்களைப் பாராட்டுகிறேன். நன்றி வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா அவர்களுக்கு நேச வணக்கம்!

   மன்னிப்பு போன்ற பெரிய சொற்களைத் தாங்கள் பயன்படுத்த வேண்டியதில்லை. நான் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டும் உரிமை தங்களுக்கு எப்பொழுதும் உண்டு.

   இயைபுடனும், அசை மாறாமலும் இரண்டு வரியில் அடங்குவது போல் எழுதி விட்டாலே அது குறள் வெண்பா ஆகி விடும் என்று நான் தவறாகக் கருதியதாலேயே இப்படி எழுதத் துணிந்து விட்டேன். இப்பொழுது நீங்களும், மேலே இனியன் கோவிந்தராஜூ அவர்களும் சொன்னதிலிருந்துதான் இது தவறு என்பதையே அறிகிறேன். மற்றபடி, கற்றுக் கொள்ளக்கூடாது என்றோ குறள் வெண்பா இலக்கணத்தை மீற வேண்டும் என்றோ குறள் வெண்பா பற்றி மற்றவர்களுக்குத் தவறான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்றோ அல்லது இது போன்ற வேறெந்த தவறான நோக்கத்திலுமோ சிறியேன் இதைச் செய்யவில்லை. கண்டிப்பாக இனி இப்படிச் செய்ய மாட்டேன் என உறுதி அளிப்பதோடு என்னுடைய இந்தப் பதிவைப் பார்த்துக் குறள் வெண்பா பற்றி யாரும் தவறாகப் புரிந்து கொண்டு விடாமலிருக்க உரிய விளக்கத்தையும் இப்பொழுதே சேர்த்து விடுகிறேன்.

   எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
  2. வணக்கம் நண்பரே! மிகுந்த தயக்கத்துடன் தான் மேற்கண்ட எனது பின்னூட்டத்தையே இட்டேன். ஆனால், தங்களின் பண்பால் என்னை மேலும் கவர்ந்துவிட்டீர்கள்! விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்தவர்கள் நிச்சயமாகத் தன் கருத்தில் வெல்வார்கள். நீங்களும் வென்றுவிட்டீர்கள்- என் மனத்தை! நன்றியும் வணக்கமும்.
   “பணியுமாம் என்றும் பெருமை! சிறுமை
   அணியுமாம் தன்னை வியந்து” – குறளார்.

   நீக்கு
  3. மிக்க மகிழ்ச்சி ஐயா! உங்களிடம் படிக்காவிட்டாலும் நானும் உங்கள் மாணவனே! மிக்க நன்றி!

   நீக்கு
 5. வகைமை, முறைமை என்பதற்கப்பால் கூறப்பட்டுள்ள கருத்துகளோடு முழுமையாக உடன்படுகிறேன். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா! மிக்க மகிழ்ச்சி ஐயா! அடுத்த முறை வகைமை, முறைமை ஆகியவற்றையும் சரியாகக் கற்றுக் கொண்டு எழுதி தங்களைப் போன்றோரை முழுமையாக நிறைவுபடுத்த முயல்கிறேன்! மிக்க நன்றி!

   நீக்கு
 6. அய்யா நீங்கள் புனைந்த புதிய திருக்குறள் கண்டேன். என் பாராட்டுக்கள்
  நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய திருக்குறளை எழுதியுள்ளேன்.
  திருக்குறளில் உள்ள “பெண்வழிசேறல்” அதிகாரத்தின் கருத்து நிலைக்கு எதிர்நிலையில் நின்று எழுதப்பட்டது.
  காலம் சென்ற எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் திருக்குறள் குறித்த விமரிசனத்தை (“பெண்வழிசேறல்” மற்றும் “வரைவின் மகளிர்”
  அதிகாரங்கள் குறித்த) படித்ததினால் ஏற்பட்ட ஏற்பட்ட உந்துதலால்
  உருவானது “ஆண்வழிச்சேறல்” என்ற என் படைப்பு
  தங்களின் பார்வைக்கு: http://saravananmetha.blogspot.com/2015/10/blog-post_47.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா! தங்கள் பாராட்டுக் கண்டு மிக்க மகிழ்ச்சி! ஆனால், பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளது போல் இது திருக்குறள் பாணியிலான இரு வரிக் கவிதைதானே தவிர, புதுக்குறள் இல்லை. காரணம், இது குறள் வெண்பா இலக்கணத்தைக் கடைப்பிடிக்காமல் எழுதப்பட்டது.

   தங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி! விரைவில் வருகிறேன்!

   நீக்கு
  2. அய்யா நீங்கள் புனைந்த புதிய திருக்குறள் கண்டேன். என் பாராட்டுக்கள்
   நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய திருக்குறளை எழுதியுள்ளேன்.
   திருக்குறளில் உள்ள “பெண்வழிசேறல்” அதிகாரத்தின் கருத்து நிலைக்கு எதிர்நிலையில் நின்று எழுதப்பட்டது.
   காலம் சென்ற எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் திருக்குறள் குறித்த விமரிசனத்தை (“பெண்வழிசேறல்” மற்றும் “வரைவின் மகளிர்”
   அதிகாரங்கள் குறித்த) படித்ததினால் ஏற்பட்ட ஏற்பட்ட உந்துதலால்
   உருவானது “ஆண்வழிச்சேறல்” என்ற என் படைப்பு
   தங்களின் பார்வைக்கு: http://saravananmetha.blogspot.com/2015/10/blog-post_47.html

   நீக்கு
  3. நண்பரே! நீங்கள் முதல் முறை அழைத்தபொழுதே வந்து, உங்களுடைய அந்தப் பதிவைப் படித்து, என் கருத்தையும் அளித்திருந்தேனே!

   நீக்கு
 7. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி அய்யா . முதலில் உங்கள் பதில் மற்றும் கருத்துரையை நான் பார்க்கவில்லை .

  அதனாலதான் மீண்டும் பின்னூட்டம் இட்டேன்

  பதிலளிநீக்கு

தொடர...

மின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓

அனுப்புநர்:FeedBurner

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

கூகுள்+ அகத்தில்...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

அ.தி.மு.க (7) அஞ்சலி (18) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (62) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (24) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (19) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (2) இனப்படுகொலை (12) இனம் (45) ஈழம் (33) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (10) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (7) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (16) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (9) தமிழர் (32) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (1) தாலி (1) தி.மு.க (3) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (6) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (1) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (16) வாழ்க்கைமுறை (12) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)

அகமார்ந்தோர் பதிவேடு

முகரும் வலைப்பூக்கள்