.

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! - 2017 (காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் ஒரு மறுவெளியீடு)


நண்பர்களே! நேற்று இரவு பாரதியார் என் கனவில் வந்தார். "மகனே! நம் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் முன்பே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!’ என்று பாடியவன் நான். இதோ, விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நேரத்தில் அதே பாடலை இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்றபடி மாற்றி எழுத விரும்புகிறேன்" என்றார்.

"ஆகா! சொல்லுங்கள் தெய்வமே! நான் எழுதி வெளியிடுகிறேன்" என்றேன்.

அப்படி பாரதியார் சொல்லச் சொல்ல நான் எழுதியதுதான் கீழே நீங்கள் படிக்கப் போகும் ‘சுதந்திரப் பள்ளு-2017’. ஆக, இதன் காப்புரிமை பொறுப்பு எல்லாம் முழுக்க முழுக்க பாரதியாருக்கே! படித்துப் பாருங்கள்!

சுதந்திரப் பள்ளு-2017
(இராகம் – முகாரி; தாளம் – சோற்றுத்தாளம்)

                                 ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!
                                 அழகான சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று
                                 ஆடுவோமே!

                                 பாயென்று துலுக்கரைச் சொன்னதும் போச்சே! – வெள்ளைப்
                                 பரங்கியை அன்னையென்னும் காலமும் ஆச்சே! – நல்
                                 நீதியே பெரிதென்ற காலமும் போச்சே! – சமய
                                 சாதிக்கு வாக்களிக்கும் காலமும் ஆச்சே!
 

                                 ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!
                                 அழகான சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று
                                 ஆடுவோமே!

                                 எங்கும் ஜி.எஸ்.டி என்பதே பேச்சு! - நாம்
                                 எல்லோரும் கிறுக்கரென்று உறுதியாச்சு!
                                 பாரத் மாதா கீ ஜே கூறுவோமே! – நாம்
                                 பசுக்காக மனிதரையே போடுவோமே!

                                 ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!
                                 அழகான சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று
                                 ஆடுவோமே!

                                 மீனவர் பிணம்எண்ணும் காலம் வந்ததே! – அணு
                                 மின்சாரம் என்கின்ற காலன் வந்ததே! – இந்தி
                                 தேசம் முழுக்கவுமே ஆள வந்ததே! - உயிர்
                                 தாய்மொழி எதற்கென்னும் நாளும் வந்ததே!

                                 ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!
                                 அழகான சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று
                                 ஆடுவோமே!

                                 உழவுக்கும் தொழிலுக்கும் பாடை கட்டுவோம்! – நம்
                                 உழைப்பெல்லாம் வெளிநாட்டுக் காகக் கொட்டுவோம்!
                                 மானியம் ஏதும்இனி கேட்க மாட்டோம்! – நல்ல
                                 மாநிலக் கூட்டாட்சியெனப் பேச மாட்டோம்!

                                 ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!
                                 அழகான சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று
                                 ஆடுவோமே!

                                 நாமிருக்கும் நாடு நமதில்லை உணர்வோம்! - அதை
                                 அம்பானி களுக்கேநாம் விற்று வளர்வோம்!
                                 நாடென்ன செய்ததெனக் கேட்க மாட்டோம்! – ஆதார்
                                 கார்டின்றி இனி யாரும் சாக மாட்டோம்!

                                 ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!
                                 அழகான சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று
                                 ஆடுவோமே!


{உண்மையான சுதந்திரப் பள்ளு இங்கே!}
(நான் ‘அகரமுதலதனித்தமிழ் இதழில் ௧௫-௦௮-௨௦௧௭ அன்று எழுதியது)
❀ ❀ ❀ ❀ ❀

படம்: நன்றி ஆச் தக், தினகரன், தமிழ் ஒன் இந்தியா, நியூசு 18 தமிழ்நாடு, இந்தியா ஒபீன்சு.

பள்ளு மேற்கோள்: நன்றி தமிழ் இலக்கியம்.

கவிதையின் புதிய பதிப்பு உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களையும் தெரிவியுங்கள்! அடுத்த முறை, பாரதியார் என் கனவில் வரும்பொழுது அவரிடம் தெரிவிக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

முகநூல் வழியே கருத்துரைக்க

8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. முதல் ஆளாக வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே! ரசனை, ரகளை என்பதை விட வேதனையின் வெளிப்பாடாக அவலச் சுவை காட்டும் பதிவாகவே இதை வெளியிட்டுள்ளேன். உண்மையான விடுதலையை நாம் இன்னும் பெறவேயில்லை என்பதை இதன் மூலம் மக்கள் உணர வேண்டும் என்பதே விருப்பம். பாராட்டுக்கு நன்றி!

   நீக்கு
 2. செம இபுஞா நண்பரே/சகோ!!

  மிக அழகாகப் பா வெல்லாம் புனைகின்றீர்களே!! வாழ்த்துகள்!

  இறுதி வரி அசத்தல்!!

  கீதா: இந்த ஆதார் எண் என்பதை, அமெரிக்காவில் பயன்படுத்தி வரும் ஸோசியல் செக்யூரிட்டு நம்பர் போன்று இங்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கியுள்ளனர். அங்கு ஸோஷியல் செக்யூரிட்டி நம்பரை கணினியில் தட்டினால் அந்த நபரைப் பற்றிய அனைத்து விவரங்களும் வந்துவிடும். வரி கட்டாத விவரம் முதற்கொண்டும் அனைத்தும். அங்கு போய் இறங்கி நாம் அங்கு இருக்கப் போகிறோம் என்றால் நிரந்தரக் குடியுரிமை இல்லாமல் சில காலமேதான் அதாவது ஓரிரு வருடங்கள் என்றாலும் நாம் நமது தகவல்களைக் கொடுத்து இந்த எண்ணைப் பெற வேண்டும். இப்போது என் மகனும் அங்கு சென்றதும் தான் எதற்காக வந்திருக்கிறோம் என்ற தகவல்கள் கொடுத்து, பதிந்து வாங்கியுள்ளான். இந்த எண் இல்லை என்றால் நாம் அங்கு வங்கிக் கணக்கு கூடத் தொடங்க இயலாது.

  ஆனால் நம்மூரில் இதை இடையில் கொண்டு வந்ததால் இப்படியானக் குழப்பங்கள். மட்டுமல்ல ஒன்றைக் கொண்டு வரும் முன் அதற்கான சில அடிப்படை விசயங்களை ஆராய்ந்து அதை நிறுவிய பின் கொண்டு வந்திருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துளசி ஐயா! உங்கள் பாராட்டு கண்டு மிக்க மகிழ்ச்சி! பாப்புனைதல்தான் என் முதல் எழுத்து முயற்சி! கட்டுரை, கதை எல்லாம் அதன் பிறகுதான் எழுதத் தொடங்கினேன். தங்கள் குறிப்பான பாராட்டுக்கு மிக்க நன்றி!

   கீதா சகோ! ஆதார் அட்டை பற்றிய உங்கள் கருத்துக்கள் மிகவும் சரியானவை. அதே நேரம், நாம் முதன்மையாகக் கவனிக்க வேண்டிய இன்னொன்று என்னவெனில், அமெரிக்கா வளர்ந்த நாடு, வல்லரசு நாடு. உற்பத்தி, தொழில், சேவை, அடிப்படைக் கட்டமைப்பு அனைத்திலும் அவர்கள் தன்னிறைவு பெற்று விட்டார்கள். எனவே, அடுத்து நாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகும் முயற்சியாக இப்படிக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அடையாள அட்டை வழங்குதல் போன்ற முறைகளை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இங்கு அப்படியா? இந்தியா இன்னும் தன் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் கூட முழுமையை அடையவில்லை. நாட்டில் முப்பது கோடிக்கும் மேற்பட்டோர் அன்றாடம் பட்டினியாகப் படுக்கச் செல்கிறார்கள். சாதி, பெண்ணடிமைத்தனம் என சமூக மதிப்பீடுகள் எல்லாம் படுகுழியில் கிடக்கும் தேசம். இப்படிப்பட்ட நாட்டில் மக்களுக்கு அடையாள அட்டை இப்பொழுது கட்டாயமா? செய்ய வேண்டிய கடமைகள் பல்லாயிரக்கணக்கில் இருக்க இதுதான் இப்பொழுது இன்றியமையாத் தேவையா? கேட்டால், இப்படி எல்லாரையும் அரசின் நேரடிக் கண்காணிப்பில் கொண்டு வருவதன் மூலம் வரி ஏய்ப்பை ஒழித்து, அந்தப் பணத்தைக் கொண்டு ஏழை மக்களுக்கு உதவுவோம் என்பார்கள். ஏழைகள் இனி இந்நாட்டில் உயிரோடு வாழ இயலுமா என்கிற கேள்வி எழும் அளவுக்குக் கொடுமையான சட்டத் திட்டங்களை அமல்படுத்தும் இவர்கள், இந்தப் பணத்தின் மூலம் ஏழைகளைக் காப்பாற்றுவார்கள் என்பது எப்பேர்ப்பட்ட பொய் இல்லையா?

   உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி சகோ!

   நீக்கு
 3. எங்கும் ஜி.எஸ்.டி என்பதே பேச்சு! - நாம்
  எல்லோரும் கிறுக்கரென்று உறுதியாச்சு!
  பாரத் மாதா கீ ஜே கூறுவோமே! – நாம்
  பசுக்காக மனிதரையே போடுவோமே

  //////
  பச்சிளங்குழந்தையாய் இருந்தாலும் ஓகே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பச்சிளங்குழந்தையாய் இருந்தாலும் ஓகே// - சரியாகச் சொன்னீர்கள் ராஜி அவர்களே! அப்படித்தான் நடக்கிறது. என்ன செய்ய, நம்மால் முடிந்ததெல்லாம் இப்படியான எழுத்துப் புலம்பல்கள்தாம்.

   இதுதான் என் தளத்துக்கு உங்கள் முதல் வரவு என நினைக்கிறேன். தொடர்ந்து வருகை புரியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களுக்கும் சென்று சேர மேலே உள்ள வாக்குப் பொத்தான்களை அழுத்துங்கள்!

   நீக்கு
 4. நீங்கள் எழுதிவிட்டுக் காப்புரிமை பாரதிக்கே என்றால் என்ன நியாயம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹ்ஹா! அவர் சொல்லச் சொல்ல நான் எழுதியதுதானே! எனவே, காப்புரிமை அவருக்குத்தானே? கருத்துக்கு நன்றி ஐயா!

   நீக்கு

பதிவர் பரிந்துரை

’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு

பார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...

தொடர...

மின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓

அனுப்புநர்:FeedBurner

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

அ.தி.மு.க (7) அஞ்சலி (18) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (63) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (24) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (19) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (2) இனப்படுகொலை (12) இனம் (45) ஈழம் (33) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (10) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (6) கீச்சுகள் (2) குழந்தைகள் (7) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (16) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (9) தமிழர் (33) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (1) தாலி (1) தி.மு.க (3) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (3) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (1) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (16) வாழ்க்கைமுறை (12) வாழ்த்து (3) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (5) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)

அகமார்ந்தோர் பதிவேடு

முகரும் வலைப்பூக்கள்