.

திங்கள், ஜூன் 16, 2014

மச்சி! நீ கேளேன்! - 1 | லைக் அண்டு ஷேர்!


Machi! Nee Kaelaen!
யுவா தொலைக்காட்சி இதழில் நான் எழுதும் புதிய தொடர்!

ச்சி... வாழ்க்கையே லைக் அண்டு ஷேரிங்தான் மச்சி! நாம் எதை எதை விரும்புகிறோம், எதை எதைப் பகிர்கிறோம் என்பதுதான் நம் வாழ்க்கையையும் உறவுகளையும் தீர்மானிக்கிறது.


மண்ணை விரும்புபவன் அதனுடன் தன் வியர்வையைப் பகிர்கிறான்; உழவனாகிறான். மொழியை விரும்புபவன் அதில் தன் கற்பனையைப் பகிர்கிறான்; எழுத்தாளனாகிறான். மக்களை நேசிப்பவன் அவர்களுக்குத் தன் ரத்தத்தைப் பகிர்கிறான்; தலைவனாகிறான்.

பொது வாழ்க்கையில் இப்படியென்றால் சொந்த வாழ்க்கையில், காதலைப் பகிர்பவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கிறது. அன்பைப் பகிர்பவர்களுக்குச் சிறந்த உறவுகள் கிடைக்கின்றன. தோழமையைப் பகிர்பவர்களுக்கு உண்மையான நட்பு கிடைக்கிறது.

நம் விருப்பு வெறுப்புகளில் மற்றவர்கள் தலையிடும்பொழுது, அதை மாற்றிக் கொள்ளச் சொல்லும்பொழுது, அது சரியோ தவறோ நமக்கு மூக்குக்கு மேல் கோபம் வருகிறது. “நான் எதை விரும்ப வேண்டும், விரும்பக்கூடாது என்பது என் தனிப்பட்ட விஷயம். அதை மற்றவர்கள் தீர்மானிக்கக்கூடாது” என நாம் நினைக்கிறோம். உண்மைதான்; விருப்பும் வெறுப்பும் அவரவர் தனிப்பட்ட உரிமை. அதை ஊரார் தீர்மானிக்க முடியாது. ஆனால், நாம் விரும்புகிற அல்லது வெறுக்கிற விஷயங்கள் நம்மிடம் எதைப் பகிர வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாதே மச்சி!

படிக்கும் பழக்கத்தை விரும்பினால் அறிவு, துணிவு என வாழ்வின் வெற்றிச் சூத்திரங்களை அது நமக்குப் பகிர்கிறது. அதுவே, சிகரெட்டை விரும்பினால் அது நம்மிடம் புற்றுநோயைத்தான் பகிர்கிறது. உழைப்பை வெறுக்கிறவனுக்கு வாழ்க்கை ஒரே இடத்தில் தேங்கி விடுகிறது. ஆனால், வியர்வையை விரும்புகிறவனுக்கு வாழ்க்கை உச்சங்களைப் பரிசளிக்கிறது.

அதற்காக, நல்லதையே விரும்பி நல்லதையே பகிர்பவர்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும் எனச் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்டவர்களுக்குக் கெட்டது நடந்தாலும் அதை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெறும் துணிச்சலை, ஆற்றலை அது வழங்குகிறது.

நினைத்துப் பாருங்கள்! தமிழ் ஈழத்துக்காகப் போராடிக் கைது செய்யப்படும் மாணவனுக்கு இருக்கும் கெத்தும் திமிரும், குடித்துவிட்டுக் காவல்துறை அதிகாரியிடம் பிடிபடுபவனுக்கு இருக்க முடியுமா?

எனவே, நம் விருப்பு வெறுப்பை மையப்படுத்தி எதையும் சிந்திக்காமல், நல்லது கெட்டதை மையப்படுத்தி நம் விருப்பு வெறுப்புகளை வடிவமைத்துக் கொள்வோம்! உலகில், நல்லது எதுவாக இருந்தாலும் அது எனக்குப் பிடித்தமானதாகத்தான் இருக்க வேண்டும் எனவும், கெட்டது எதுவாக இருந்தாலும் அது என் வெறுப்புக்குரியதாகத்தான் இருக்கும் எனவும் நம் கொள்கையை வகுத்துக் கொண்டு அதனடிப்படையில் நம் விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கலாம் வாருங்கள்!

இங்கு நான், இப்படிப் பக்கம் பக்கமாக அறுத்துத் தள்ளுவதைத்தான் அன்றே சொன்னார் ஔவையார், ஒரே வரியில் ‘அறம் செய விரும்பு’ என்று!

அதே சமயம், நல்லதை விரும்பினால் மட்டும் போதாது அடுத்தவர்களுடன் பகிரவும் வேண்டும்!

இணையத்தையே எடுத்துக் கொள்வோம்! இன்று நம் நண்பர்கள் எத்தனை பேர் வலைப்பூக்கள் தொடங்கி எவ்வளவெல்லாம் அருமையாக எழுதுகிறார்கள்!

கூடங்குளம் போராட்டம் முதல் காஷ்மீர் பிரச்சினை வரை, கண் தானம் முதல் கணினிப் பாதுகாப்பு வரை எல்லாவற்றைப் பற்றியும் எழுதுகிறார்கள், படிக்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் அவற்றைப் பகிர்கிறோம்? அட, பதிவின் இறுதியில் இருக்கும் கூகுள்+ பொத்தானை அழுத்த ஒரு நொடி ஆகுமா? அதைக் கூட நம்மில் பலர் செய்வதில்லை. படித்தவுடன் டேப் மாறிப் போய்க் கொண்டே இருக்கிறோம். தப்பு மச்சி!

நல்லதைப் பகிர வேண்டும்! நாம் அறிந்த நல்லனவற்றை அடுத்தவர்களுக்கும் பரப்ப வேண்டும். நாம் கற்ற அறிவுநுட்பங்களை மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். கற்றுக்கொள்ளும்பொழுது அடிப்படை மட்டும்தான் புரியும். அதையே மற்றவர்களுக்குக் கற்பிக்கும்பொழுது, அது மேலும் பல புதிய கோணங்களில் நமக்குப் புரியத் தொடங்கும். ஒருமுறை முயன்றுதான் பாருங்களேன்!

இதுவும் நம் முன்னோர்களில் ஒருவர் சொன்னதுதான். இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நம்மை விழி விரிய வைக்கும் அறிவியல் நுட்பங்களைச் சொல்கிற திருமந்திரத்தை எழுதிய திருமூலர் சொன்னார் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று. 

Like and Shareஆமாம் மச்சி, முகநூலின் ‘விருப்பம்’ பொத்தானையும், ‘பகிர்தல்’ பொத்தானையும் உருவாக்கியது வேண்டுமானால் மார்க் சக்கர்பெர்க்காக இருக்கலாம். ஆனால், நல்லது எதுவாக இருந்தாலும் விரும்ப வேண்டும், மற்றவர்களுடன் அதைப் பகிர வேண்டும் எனும் கருத்தாக்கத்தை உருவாக்கியது தமிழ்ச் சமூகம்தான்.

எனவே, நல்லதையே விரும்புவோம், நல்லதையே பகிர்வோம்! நல்லதே நடக்காவிட்டாலும்!
--பகிர்வேன்...
படங்கள்: நன்றி யுவா தொலைக்காட்சி

(இந்தியாவிலேயே கல்லூரி மாணவர்களுக்கான முதல் இணையத்திரை - யுவா தொலைக்காட்சியில் நான் எழுதும் தொடர்.)

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

6 கருத்துகள்:

  1. உண்மையிலேயே அருமையாக இருந்தது மச்சி.

    பதிலளிநீக்கு
  2. முதல் ஆளாக வந்து கருத்தளித்தமைக்கும் பாராட்டுக்கும் நன்றி மச்சி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  4. மிக அருமையான, அறிவான, மனித நேயத்தை உட்படுத்திச் சொல்லும் பதிவு!

    (இந்தியாவிலேயே கல்லூரி மாணவர்களுக்கான முதல் இணையத்திரை - யுவா தொலைக்காட்சியில் நான் எழுதும் தொடர்.)

    இப்போதுதான் கேள்விபடுகின்றோம். இந்தத் தொலைக்காட்சி பற்றி! தங்களுக்கு வாழ்த்துக்கள் அதில் தாங்கள் எழுதுவதற்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா! இப்பொழுதுதான் இந்தத் தொலைக்காட்சியைத் தொடங்கியிருக்கிறோம். (ஆம்! நானும் அதில் ஓர் உறுப்பினன். தமிழ்ப் பகுதிக்குத் துணையாசிரியராக இருக்கிறேன்). மாணவர்களின் ஆதரவால் விரைவில் இஃது அனைவர் கவனத்தையும் கவருமென நம்புகிறோம்! நேரமிருக்கும்பொழுது அதையும் வந்து பார்க்க வேண்டுகிறேன்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்