.

திங்கள், அக்டோபர் 12, 2015

ஏனெனில் நாங்கள் தமிழர்கள்!



US - Srilanka - UN
ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக் குறித்துப் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளோடு இணைந்து இலங்கையே விசாரித்தால் போதும்! - ஐ.நா-வில் தீர்மானம்


உலகின் பிற நாடுகளில்

சொந்த நாட்டு மக்கள் மீது

அந்த நாடே இராணுவம் ஏவினால்

அதற்குப் பெயர் ‘இனப்படுகொலை’!

ஆனால்,

அதுவே எங்களுக்கு நடந்தால்

அதன் பெயர்

தீவிரவாத ஒழிப்பு...

தாக்குதல்...

போர்...

ஏனெனில் நாங்கள் தமிழர்கள்!



மற்ற நாடுகளில்

சிறுபான்மையினர்

உரிமையோடு வாழ முடியாவிட்டாலே

தனிநாட்டுக்கான பொது வாக்கெடுப்பு நடத்தலாம்;

அதுவே நாங்களாக இருந்தால்

உயிரோடே வாழ முடியாவிட்டாலும்

ஒற்றையாட்சிக்குள்தான்

ஒடுங்கிக் கிடக்க வேண்டும்!

ஏனெனில் நாங்கள் தமிழர்கள்!



மற்ற இனங்கள் மீது

இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டால்

பன்னாட்டு விசாரணை தேவை;

அதுவே எங்கள் மீது எனில்

எங்களைக் கொன்றொழித்தவனே

விசாரித்தால் போதும்!

ஏனெனில் நாங்கள் தமிழர்கள்!



இப்படி

உலகுக்கெல்லாம் ஒரு நீதியும்

எங்களுக்கு மட்டும் தனிநீதியும்

வழங்கும்

மனித உரிமை மீட்பர்களே!

மக்களாட்சிக் காவலர்களே!

இந்தப் பெயர்களில் உலா வரும்

உலக நாடுகளே!

ஒன்றே ஒன்றை மட்டும்

மறந்து விடாதீர்கள்!



இந்த உலகம் மட்டுமில்லை

இதில் வாழும் மனிதர்கள் மட்டுமில்லை

இதிலுள்ள நாடுகளுக்கும் கூட

ஏற்ற இறக்கம் என்பதுண்டு!

அதற்கு எடுத்துக்காட்டே நாங்கள்தாம்!



ஒரு காலத்தில்
India, Lemuria the Tamil Continents!

இந்த உலகையே

கட்டி ஆண்டவர்கள் நாங்கள்!

கையகல நிலத்தை

நாடென வைத்துக் கொண்டு

ஆட்டம் போடுபவர்களே!

கண்டங்களையே நாடுகளாய்

வைத்துக் கொண்டு

பேராட்சி புரிந்தவர்கள் நாங்கள்!



ஓரிரு நாடுகளை
Chola Kingdom

விரலசைவில் வைத்துக் கொண்டு

கொட்டம் அடிப்பவர்களே!

உலகையே ஒருகுடைக்கீழ்க்

கொண்டு வந்து

கொற்றம் வீற்றிருந்தவர்கள் நாங்கள்!



இந்த பூமித்தாயின் மடியில்

முதலில் தவழ்ந்தவர்கள் நாங்கள்!

ஆனால் இன்று,

நேற்றுப் பிறந்த உங்களிடம்

கையேந்தி நிற்கிறோம்

உங்கள் வாயிலிருந்து உதிர்க்க வேண்டிய

ஒரே ஒரு வார்த்தைக்காய்!



நிலை மாறும் உலகில்

நிலைக்கும் என்ற கனவில்

மிதப்பவர்களே!

காலம் ஒருநாள் மாறும்!

பூனைகளுக்கே காலம் வரும்பொழுது

புலிகளுக்கு வராமலா போகும்?



ஆனால்,

அப்பொழுது

உங்கள் நிலைமை

என்னவாக இருக்கும்?

தெரியாது!

அது எப்படி இருந்தாலும் சரி,

இன்று

நீங்கள் எல்லாரும்

எங்களிடம் நடந்து கொண்டது போல்

நாங்கள் அப்பொழுது

உங்களிடம் நடந்து கொள்ள மாட்டோம்!

இவை எதையுமே நாங்கள்

மனதில் கொள்ளவும் மாட்டோம்!

ஏனெனில் நாங்கள் தமிழர்கள்! 

❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி லங்கா ரைம், யூடியூபு, சத்தியசீலன்.நெட்,


பதிவின் கருத்து சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

11 கருத்துகள்:

  1. ஐயா வணக்கம்..!

    அலங்காரமற்ற வார்த்தைகளில் அவலமும் ஆண்மையும் பொறுத்தலாற்றாமையும் பெருமிதமும் நிறைந்து வடிகின்ற கவிதை.

    மனம் தொடுகிறது.

    இன்னும் எழுதுங்கள்.

    காத்திருக்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! தங்கள் விரிவான உளமார்ந்த பாராட்டுக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
    2. நன்றி! வணக்கம்
      அய்யா அருமையான ஆழ் மனத்தின் வெளிப்பாடு ....

      நீக்கு
    3. மிக்க நன்றி ஐயா! உங்கள் முதல் வருகைக்கு என் அன்பார்ந்த நல்வரவு!

      நீக்கு
  2. ஏன? என்றால்..... கல தோன்றா மண் தோன்றா காலத்தே தோன்றிய நாம் தமிழர்கள்............

    பதிலளிநீக்கு
  3. அட! அருமையான உள ஒலிகளின், உணர்வுகளின் எழுத்துவடிவம்! ஆம்! நாம் தமிழர்கள்தாம்! அருமையான வெளிப்பாடு நண்பரே!

    பயணத்தில் இருந்ததால் விடுபட்டது போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இனிமையான பாராட்டுக்கும் ஒத்திசைவான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா, அம்மணி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்