.

செவ்வாய், மார்ச் 31, 2015

உச்சநீதிமன்றத்துக்கும் அச்சமில்லாப் பெண்ணுக்கும் நன்றி! {50ஆவது பதிவு!}


Supreme Court of India

வற்றைத் தட்டிக் கேட்க உரிமை கோரும்பொழுதே, நல்லதைப் பாராட்ட வேண்டிய கடமையும் நமக்கு வந்து சேர்ந்து விடுகிறது!

அவ்வகையில், தமிழர்களின், இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரின் நெஞ்சார்ந்த நன்றிக்குரிய விதத்தில் அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும்! தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(அ) பிரிவு செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பதுதான் அது!

புதன், மார்ச் 18, 2015

உங்கள் இ.பு.ஞானப்பிரகாசனின் கீச்சுக்கள்!@Gnaanapragaasan Twitter Profile

நான் ஒன்றும் பெரிய கீச்சர் (Tweeter) இல்லை. என் கீச்சுக்களில் (tweets) பெரும்பாலானவை இணையப் பக்கங்களின் பகிர்வுகள்தாம். இருந்தாலும், தப்பித் தவறி நானும் சில நல்ல (!) கீச்சுக்களை அவ்வப்பொழுது கீச்சி விடுவதால், அவற்றைத் தொகுத்துத் தர வேண்டும் என்று இரக்கமே இல்லாமல் ஒரு முடிவு எடுத்துவிட்டேன். என் வலைப்பூவைப் படிக்கிற குற்றத்துக்கு உங்களையெல்லாம் நான் இதுவும் செய்வேன், இதற்கு மேலும் செய்வேன் என்கிற உறுதிமொழியோடு இதோ என் கீச்சுக்களில், தேர்ந்தெடுத்த முதல் ௨௫ (இருபத்தைந்து) காலவரிசைப்படி உங்கள் பார்வைக்கு... மறுகீச்சுக்கு... உடுக்குறிக்கு!

வியாழன், மார்ச் 05, 2015

போராளியைத் தெருவில் நிறுத்திய போராளி! தலைவர்கள் அமைதி! ஏன்? - சில கேள்விகள், சில கோரிக்கைகள்

Poet Thamarai with her son in agitation!
கவிஞர்.தாமரை மகனுடன் போராட்டத்தில்

ண்ணாநிலைப் போராட்டங்கள் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால், புகழ் பெற்ற போராளி ஒருவரை நோக்கியே அப்படி ஒரு போராட்டம் எழுந்திருப்பது வரலாற்றிலேயே இதுதான் முதன் முறையாக இருக்கும் என நினைக்கிறேன்.

தோழர் தியாகு! – தமிழர் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்! பெருந்தலைவர் காமராசர் காலத்திலிருந்து அரசியலில் இருப்பவர். தீவிரப் பொதுவுடைமையாளர்! நக்சல் இயக்கத்தில் இணைந்து போராடியதற்காகப் பதினைந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அடைந்தவர். அதே நேரம், ஈழ ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியை விட்டே வெளியேற்றப்படவர்! ‘தாய்த் தமிழ்ப் பள்ளி’ எனும் பெயரில் பல தமிழ்வழிப் பள்ளிகளை நடத்தி, தமிழருக்காகப் போராடுவதோடு மட்டுமின்றித் தமிழைக் காக்கவும் பெருமுயற்சியெடுத்து வரும் பெருந்தகையாளர்! மாவீரர்.திலீபன் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி உயிர் ஈந்தபொழுது ஈழத்துக்காகக் குரல் கொடுத்தது முதல் முல்லைப் பெரியாறு போன்ற அண்மைக்காலத் தமிழர் பிரச்சினைகளுக்காகக் களமாடுவது வரை இவர் ஈடுபடாத போராட்டங்களே இல்லை! எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இலங்கையில் பொதுநலவாய (commonwealth) மாநாடு’ நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தி ‘வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற பெயரில் இவர் நடத்திய ‘சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்’ பன்னாட்டளவில் அறியப்பெற்ற ஒன்று!

இப்பேர்ப்பட்ட போராளியை நோக்கியே ஒரு போராட்டத்தை நடத்தி வருகிறார் பெண்மணி ஒருவர். அதுவும், யாரோ தெருவில் போகிற பெண்மணியில்லை; இவர்தம் சொந்த மனைவி! அதுவும், பெற்ற பிள்ளையுடன் இவர் இருக்குமிடமெல்லாம் தேடித் தேடித் தொடர்ந்து சென்று ஏழு நாட்களாகத் தன் போராட்டத்தைக் கடைப்பிடித்து வருகிறார் அந்தப் பெண்மணி. அவர் வேறு யாருமில்லை; உலகத் தமிழர்கள் அனைவரும் நன்கறிந்த திரைப் பாடலாசிரியரும், தமிழ்ப் போராளியுமான கவிஞர்.தாமரை அவர்கள்தாம்!

ஈழ இனப்படுகொலையின்பொழுதும் அதன் பின்புமான போராட்டங்களில் கவிஞர்.தாமரை அவர்களின் பங்கு நாம் அறியாததில்லை. தமிழனென்று மீசை முறுக்கிய ஆண் கவிஞர்கள் பலர் வீட்டிலிருந்தபடி ஈழத் தமிழர்களுக்காகத் தங்கள் கண்ணீரால் கவிதை வடித்துக் கொண்டிருந்த அந்த வேளையில், பெண்ணென்று தயங்காமல் போராட்ட மண்ணில் நேரடியாகக் கால் பதித்த வீராங்கனை! “இலங்கைத் திரைப்பட விழாவுக்குப் போக வேண்டா” என்று கமல்காசனையே வலியுறுத்திய துணிச்சல்காரர்! அசைக்க முடியாத மக்கள் செல்வாக்குப் பெற்ற நடிகர்களும் தலைவர்களுமே ஈழத்துக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் மட்டுமே குரல் கொடுப்பதோடு வாயைப் பூட்டிக் கொண்ட அந்த நாளிலே, தமிழினத்தை அழிக்கத் துணை நின்ற இந்திய அரசை நேரடியாகவே சாடிய மறத் தமிழச்சி! ‘கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய அந்தக் கவிதை இந்த உலகப் பந்து உருளும் வரை தமிழினப் பேரழிப்புக்கான சான்றாவணமாய் நிலைத்து நிற்கும்!

அப்பேர்ப்பட்ட பெண்மணி பெற்ற பிள்ளையுடன் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்! ஆனால்,

தொடர...

மின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓

அனுப்புநர்:FeedBurner

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

கூகுள்+ அகத்தில்...

முகநூல் அகத்தில்...

முகநூல் படிப்பகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

அ.தி.மு.க (6) அஞ்சலி (17) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (61) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (22) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (17) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (1) இனப்படுகொலை (11) இனம் (42) ஈழம் (32) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (9) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (4) சுற்றுச்சூழல் (3) சுஜாதா (1) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (14) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (7) தமிழர் (28) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (9) தாலி (1) தி.மு.க (2) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (13) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (5) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (4) மாற்றுத்திறனாளிகள் (1) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (15) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)

அகமார்ந்தோர் பதிவேடு

முகரும் வலைப்பூக்கள்