.

வெள்ளி, அக்டோபர் 17, 2014

அடர் சிவப்புக் கண்ணீருடன் விடைபெறுகிறேன்! நன்றி! வணக்கம்!




ன்பார்ந்த நண்பர்களே, உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களே, ‘அகச் சிவப்புத் தமிழ்’ அன்பர்களே அனைவருக்கும் நேச வணக்கம்!

இதுவரை நான் மொத்தம் நாற்பது பதிவுகள் வெளியிட்டுள்ளேன். இன்னும் எத்தனையோ பதிவுகளும் தொடர்களும் எழுதவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதற்குள் இப்படி ஒரு பதிவு எழுத நேருமென்று நான் கனவு கூடக் காணவில்லை. இதோ, இத்துடன் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ அழிக்கப்படுகிறது!

ஆம்! துளியும் ஈவிரக்கமின்றி இந்த வலைப்பூ மொத்தமாகக் கசக்கி எறியப்படுகிறது! இத்தனை காலமாக, இந்தச் சிறுவனின் எழுத்தையும் மதித்து மாதந்தோறும் 3500 முறைக்கும் மேல் வருகை புரிந்து, தொடங்கிய ஒரே ஆண்டில் இதை வெற்றிகரமான வலைப்பூவாக்கிய உங்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்துருகும் நன்றிகள்!

பெற்ற குழந்தையைத் தன் கரங்களாலேயே கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான தந்தையின் உளநிலையோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்! எனக்கு ஏதாவது நன்மையோ ஆறுதலோ நீங்கள் அளிக்க விரும்பினால், கனிவு கூர்ந்து ஒருபொழுதும் இதற்கான காரணத்தைக் கேட்காதிருங்கள்! அதுவே போதும்!

இந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த வலைப்பூவால் தமிழுக்கோ, தமிழர்களுக்கோ, இதர மக்களுக்கோ அணுவளவாவது நன்மை ஏதேனும் விளைந்திருக்குமானால் அதுவே என் வாழ்நாள் பெரும்பேறு எனக் கருதுவேன்!

நன்றி! வணக்கம்!

படம்: நன்றி http://www.tamilulagu.com

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

14 கருத்துகள்:

  1. அப்பிடியெல்லாம் போக விடமுடியாது:(((( எனக்கு புரியல??????
    எதுவா இருந்தாலும் அது கடந்து போகும், சகோ. திரும்பவாங்க. வருவீங்க................................

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அப்பிடியெல்லாம் போக விடமுடியாது// - உங்களுக்குத்தான் என் மீது எவ்வளவு அன்பு!! :-(((

      நீக்கு
  2. அய்யா,
    வணக்கம்.
    என்னாயிற்றெனக் கேட்காமலிருக்க முடியவில்லை.
    கேட்கவும் முடியவில்லை.
    நிச்சயமாய்த் தங்களைத் தொடர்வேன்.
    எனதாசிரியரின் இன்னொரு வடிவாகவே தங்களைக் கண்டேன்.
    அவ்வளவு எளிதில் உங்களை விட்டுவிடப் போவதில்லை என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
    எனது நம்பிக்கைகள் பொய்த்ததில்லை.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வார்த்தைகள் என்னை நெகிழச் செய்கின்றன. இந்த வலைப்பூவை அழித்தாலும் நான் இணையத்தில்தான் இருப்பேன். புதிதாக வேறு வலைப்பூத் தொடங்கும் எண்ணமும் உண்டு. பார்க்கலாம் ஐயா! என்றும் உங்களுடன் தொடர்பில் இருப்பேன்.

      நீக்கு
    2. என்றும் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பேன்.

      நீக்கு
  3. பதிவுக் குழந்தையை அழிக்க வேண்டாம். தோன்றும்போது எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என்ன எழுதுவதற்குச் சரக்கில்லாமலா அழிக்கிறேன்? புரியாமல் பேசுகிறீர்களே நண்பரே!

      நீக்கு
  4. நெகிழச் செய்யும் மேற்கண்ட கருத்துக்களும், பதிவிட்ட இந்த 24 மணி நேரத்தில் 126க்கும் மேற்பட்ட வருகைகளும் என்னை எவ்வளவு பேர் விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. உங்களுடைய இந்த ஈடிணையில்லா அன்பைத் தொடர்ந்து துய்க்க முடியாத வேதனையையும் சுமந்து கொண்டு விடைபெறுகிறேன் நன்றி! வணக்கம்!

    பதிலளிநீக்கு
  5. அய்யா,
    தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் போலத்தான் முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.
    தளத்தையும் முடக்கி வைத்திருந்திருப்பீர்கள் போல.
    தங்களின் பல கட்டுரைகளைப் படிக்கவில்லை.
    சற்றுப் பொறுமையாய் நேரம் வாய்க்கும் போது படிக்கலாம் என்று இருந்தால் ஒரே அடியாகக் காணடித்து விட்டீர்கள்.
    இனி அது முடியும் .
    இப்பொழுது தோன்றும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குத்தான் என் எழுத்துக்கள் மீது எவ்வளவு ஆவல்!! நெகிழ்கிறேன்! நன்றி ஐயா!

      ஆம்! இதோ நான் மீண்டும் வந்து விட்டேன். ஒரு சிக்கல் காரணமாகத் தளத்தையே அழிக்க நேர்ந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாய், பெருமலையாய் எழுந்த அந்தச் சிக்கல் பனிமலையாய் மறைந்து விட்டது. அதனால் மீண்டும் தளத்தைத் தொடங்கி விட்டேன். இது பற்றிய பதிவில் உங்களையும் குறிப்பிட்டுள்ளேன், பாருங்கள்!

      நன்றி! வணக்கம்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்