.

திங்கள், ஆகஸ்ட் 04, 2014

மச்சி! நீ கேளேன்! - 2 | வார்த்தை என்னும் வல்லாயுதம்!




Word - The Powerful Tool!

சீசர் செத்ததைக் கொண்டாடும் உளநிலையில் இருந்த மொத்த ரோமாபுரியையும் ஒரே ஒரு மேடைப் பேச்சால் அவரைக் கொன்றவர்களுக்கு எதிராகவே திருப்பியவை மார்க் ஆண்டனியின் சொற்கள்!...

எண்ணிக்கையிலும் பலத்திலும் மிகக் குறைவாக இருந்த பிரிட்டன் விமான வீரர்கள் தங்களை விடப் பலம் வாய்ந்து விளங்கிய ஜெர்மானியப் படையை வென்ற அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியவை சர்ச்சிலின் சொற்கள்!...

கடவுள்தான் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் தீர்மானிக்கிறார் என்கிற அளவுக்கு மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்த ஒரு மாநிலத்தில் கோடிக்கணக்கானவர்களைப் பகுத்தறிவுப் பெருவழிக்குத் திசை மாற்றியவை பெரியாரின் சொற்கள்!...

வார்த்தைகள் வரலாற்றைப் புரட்டிப் போட்டதற்கு இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகளை அடுக்க முடியும்!

ஆம், வார்த்தைகள்!... சொற்கள்!... அமெரிக்க அதிபர் முதல் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சராசரி மனிதர் வரை அனைவரிடமும் இருக்கும் ஒரே பேராயுதம்! ஆயுதம் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவை அழிவுக் கருவிகள்தான். ஆனால், ஒரே கருவி, பயன்படுத்தப்படும் விதத்தைப் பொறுத்து ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும் என்றால் அது ‘வார்த்தை’ மட்டும்தான்! அதனால்தான், புகழ்பெற்ற பேச்சாளர் ஒருவர் கூறியது போல், தமிழில் பேச்சு, எழுத்து, அறிவு ஆகிய மூன்று திறமைகளை மட்டும் ‘ஆற்றல்’ (Power) எனக் குறிப்பிடுகிறோம்!

சொற்களைக் கையாளுதல் என்பது அற்புதமான கலை. ஆனால், அனைவருக்கும் உரித்தான கலை! அனைவராலும் இது முடியும் என்பது மட்டுமில்லை, முடிகிறது! பேசவே மாட்டான், பேசவே தெரியாது, வாய் செத்த பிள்ளை என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற எத்தனையோ பேர், வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், திடீரென எரிமலையாய் வெடித்து வார்த்தைகளைக் கக்குவதை, எதிராளி திகைத்து, அயர்ந்து அப்படியே உட்கார்ந்து விடுகிற அளவுக்குப் பேசிப் பிரித்து மேய்வதை நாம் பார்க்கிறோம்! காரணம், பேச்சு என்பது இயல்பான, மனிதனின் உதிரத்திலேயே ஊறிய கலை. பலர் அதை உணர்ந்து, வளர்த்தெடுத்து, தொடர்ந்து பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். சிலருக்கோ வேறுவழியில்லாத ஒரு நிலைமை வரும்பொழுதுதான் அந்தத் திறமை –தானாக- வெளிப்படுகிறது! அப்படி ஒரு நிலைமை வரும் வரை காத்திருக்காமல், நாமாகவே நம் பேச்சாற்றலை, எழுத்தாற்றலை, மொழி ஆளுமையை வளர்த்துக் கொண்டால் நாம் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் அந்தத் துறையில் விரைவிலேயே உச்சம் தொடலாம்!

பொதுவாக, மொழி ஆளுமை என்பது அரசியல்வாதிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் மட்டும்தான் தேவை என்பது நம் நினைப்பு. ஆனால், இல்லை! வார்த்தைகளை நாம் எல்லோருமேதான் பயன்படுத்துகிறோம். எழுத்து வடிவிலோ, பேச்சு வடிவிலோ அன்றாடம் நாம் அனைவருமே அதைப் பயன்படுத்திக் கொண்டேதான் இருக்கிறோம்.

நீங்கள் வேலை தேடுபவரா? நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற உங்களுக்குத் தேவை மொழி ஆளுமை. தொழில் செய்யப் போகிறீர்களா? உங்கள் செயல்திட்டம் (Project) பிறரைக் கவர உங்களுக்கு வேண்டியது, அதில் சரியான இடங்களில் சரியான சொற்களைப் பயன்படுத்தும் திறன்! அட, காதலிக்கப் போகிறீர்களா? இப்பொழுது உங்களுக்குத் தேவை உங்கள் உள்ளத்தில் உள்ளதை உடைத்துக் காட்டும் உண்மையான சொற்கள்!

திறமையை உணர்த்த, உறவுகளைப் பலப்படுத்த, உடன் பணியாற்றுபவர்களை ஊக்குவித்து வேலையை விரைவாக்க, திட்டங்களைச் செயல்படுத்த, செயல்பாடுகளில் வெற்றியடைய, துவண்டு கிடக்கும் நண்பனை ஊக்குவிக்க, தவறாகப் புரிந்துகொண்ட காதலியைச் சமாதானப்படுத்த, அழுகிற குழந்தையைச் சிரிக்க வைக்க, சிரித்துக் கொண்டிருக்கும் தங்கையை வெறுப்பேற்றி விளையாட... என வீட்டுக்குள்ளேயும், வெளியேயும், எல்லா இடங்களிலும், எப்பொழுதும் நமக்குத் தேவைப்படுபவை சொற்கள்!

ஓவியம், சிற்பம், நாட்டியம், சமையல் என மொழி ஆளுமை தேவைப்படாத பல துறைகள் இருக்கின்றனவே என நீங்கள் நினைக்கலாம். அப்படிப்பட்ட துறைகளில் கூட, துறை சார்ந்த பணியை, கலையை நிகழ்த்துவதற்கு மொழி தேவைப்படாவிட்டாலும், அந்தத் திறமையைக் காசாக்கவும், தனக்கிருக்கும் அந்தத் திறமையை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும் மொழி தேவைப்படுகிறது. பேச முடியாத மாற்றுத்திறன் வாய்ந்த நண்பர்கள் கூடத் தங்களுக்கென்று ஒரு செய்கை மொழியை வைத்திருக்கிறார்கள். ஆக, வார்த்தைகள் இங்கு அனைவரின் வாழ்க்கையிலும் நிரம்பி வழிகின்றன. எனவே, அதன் மீதான ஆளுமை நம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது! அப்படி அது இல்லாவிட்டால்...

எத்தனையோ திறமையாளர்கள், பிறவி அறிஞர்கள் தங்களுக்கு வர வேண்டிய நல்வாய்ப்புகளை இன்னொருவரிடம் பறி கொடுத்து விட்டு நிற்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பெரும்பாலான நேரங்களில் இதற்குக் காரணம், இவர்களுடைய வாய்ப்பைத் தட்டிப் பறித்தவர்கள் இவர்களை விடத் திறமையில் குறைந்தவர்களாக இருந்தாலும் வாய்த் திறனில் வல்லவர்களாக இருப்பதுதான்!

எத்தனையோ ஆண்டுகளாக நகமும் சதையுமாய்ப் பழகி வந்த நண்பர்கள் ஒற்றைச் சொல்லால் பிரிந்து விடுவதையும் நாம் அன்றாட வாழ்வில் பார்க்கிறோம். பிரியக் காரணமானது எப்பேர்ப்பட்ட சொல்லாக இருந்தாலும், உரிய நேரத்தில் மன்னிப்பு எனும் ஒரு சொல்லைப் பயன்படுத்தி இருந்தால் அந்த அரிய உறவை நீட்டித்துக் கொண்டிருக்கலாம். அதைச் செய்யாததால் கடைசி வரை நினைவாலேயே வாடுகின்றன எத்தனையோ அன்புள்ளங்கள்!

தொடக்கத்தில், வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் சாதிக்கக்கூடியவை பற்றிப் பார்த்த நமக்கு, வார்த்தைகளைத் தேவையான நேரத்தில் பயன்படுத்தாமல் விடுவதாலோ, தவறாகப் பயன்படுத்துவதாலோ விளையக்கூடிய விபரீதங்களை இவை எடுத்துக்காட்டுகின்றன. ஆகவே, எக்காரணம் கொண்டும் பேசத் தயங்காதீர்கள்! நாம் எந்தத் துறையில் இருந்தாலும் நம் பேச்சாற்றலை வளர்த்துக் கொள்வது நம் திறமைக்குத் துணை நிற்கும்.

எனவே பேசுங்கள்!... பேசுங்கள்! வாய் திறந்து, பேனா திறந்து, இணையம் திறந்து கூடவே இதயம் திறந்து பேசுங்கள்! தெளிவாக, கூர்மையாக, உறுதியாக அதே நேரம் மென்மையாக, உண்மையாகப் பேசுங்கள்! பேச்சாற்றலை வளர்க்கிற, எழுத்தாற்றலைக் கற்பிக்கிற, மொழி ஆளுமையை மேம்படுத்தக்கூடிய வழிகாட்டல் நூல்களைப் படியுங்கள்! இவை செலவு அல்ல, வெற்றிகரமான, இனிமையான வாழ்க்கைக்கு நீங்கள் செய்யும் முதலீடுகள்!

ஏற்கெனவே பார்த்தது போல் பேச்சு, இயற்கை நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியிருக்கும் இலவசமான பேராயுதம்! அதைச் சரியான நேரத்தில், சரியானபடி பயன்படுத்தினால், ஆக்கவும் அழிக்கவும் அதை விடப் பெரிய ஆயுதம் வேறில்லை! அதை வீணடித்து விடாதே மச்சி!

--பகிர்வேன்...
படம்: நன்றி யுவா தொலைக்காட்சி


(இந்தியாவிலேயே கல்லூரி மாணவர்களுக்கான முதல் இணையத்திரை - யுவா தொலைக்காட்சியில் நான் எழுதும் தொடர்.)

தொடர்புடைய இடுகை:
மச்சி! நீ கேளேன்! - 1 | லைக் அண்டு ஷேர்!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

10 கருத்துகள்:

  1. மிக அருமையான பகிர்வு! ஒரு ஒற்றைச்சொல் நம் வாழ்க்கையையே மாற்றிவிடலாம்! அதை தெளிவான விளக்கங்களுடம் சிறப்பாக சொன்னவிதம் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  2. இன்றைக்கு தேவையான பதிவு. ஏனென்றால், தொலைக்காட்சி வந்து நம் கைகளையும் வாயையும் கட்டிவிட்டு, வெறும் கண்களுக்கும், காதுகளுக்கும் மட்டும் வேலையை வழங்கிக்கொண்டிருக்கிறது.

    "எனவே பேசுங்கள்!... பேசுங்கள்! வாய் திறந்து, பேனா திறந்து, இணையம் திறந்து கூடவே இதயம் திறந்து பேசுங்கள்! தெளிவாக, கூர்மையாக, உறுதியாக அதே நேரம் மென்மையாக, உண்மையாகப் பேசுங்கள்! பேச்சாற்றலை வளர்க்கிற, எழுத்தாற்றலைக் கற்பிக்கிற, மொழி ஆளுமையை மேம்படுத்தக்கூடிய வழிகாட்டல் நூல்களைப் படியுங்கள்! இவை செலவு அல்ல, வெற்றிகரமான, இனிமையான வாழ்க்கைக்கு நீங்கள் செய்யும் முதலீடுகள்!//"


    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கும் சிந்தனைமிகு கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  3. மிக மிக அருமையான பதிவு...ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்று பொதுவாகச் சொலவடை உண்டு...அது இதற்கு மிகவும் பொருந்தும்......நாம் பேசினாலும், எழுதினாலும்...அளந்து செய்தல் சாலச் சிறந்தது. நாம் உபயோகிக்கும் வார்த்தைகள் தான் நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லுமா இல்லை வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்லுமா என்பதைச் சொல்லும்....சிந்திய வார்த்தைகளைப் பொறுக்க முடியாதே.....பேசும் முன்னும், எழுதும் முன்னும் "எடிட்டிங்க்" என்பது மிகவும் அவசியம்....

    நல்ல ஒரு பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கும் ஆழ்ந்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  4. நல்லதொரு பதிவு ஐயா, நாவை அடக்கினால் நாட்டையும் ஆளலாம் என்பார்கள் தங்களது பதிவு நன்று.
    எனது கவிதைப்போட்டி கவிதை காண வேண்டுகிறேன்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  5. பேசவேண்டியோர் பேசாமல் இருப்பதும், வார்த்தை வரம் மட்டும் பெற்றோர் பேசித்தீர்ப்பதும் இன்றைய பல பிரச்சனைகளுக்கு காரணமா இருக்கிறது இல்லையா சகோ? மிக நல்ல பதிவு. நான் பேசுவது என்று தீர்மானித்துவிட்டேன். இதோ இப்படி பேசியிருக்கிறேன். தம 1 :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் பேசிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோ! மிக்க நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்