.

வெள்ளி, ஜூன் 21, 2013

மணிவண்ணனும் பாப்லோ நெருடாவும்
மணிவண்ணன்! தமிழ்த் திரையுலகின் ‘நையாண்டி நாயகர்! படைப்பு, நடிப்பு, அரசியல் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்! உண்மையான கலைஞர்! உண்மையான மனிதர்!

தீவிரமான கருத்துக்களைக் கூட நகைச்சுவை கலந்து எடுத்துச் சொல்லும் அங்கதச் சுவையை மணிவண்ணனுக்கு முன்பே தமிழ்த் திரையுலகில் அறிமுகப்படுத்தி விட்டார் சோ அவர்கள். ஆனால், அவருடைய அந்த அற்புதமான ‘முகமது பின் துக்ளக் திரைப்படம் முழுத் தோல்வியைத்தான் அடைந்தது. அதனாலேயே அதன் பிறகு, அப்படிப்பட்ட படங்களை எடுக்க சோ மட்டுமின்றி, யாருமே முன்வரவில்லை. ஆனால், அதே பாணியைத் தான் கையிலெடுத்துப் பெரும் வெற்றியைச் சாதித்துக் காட்டிய மணிவண்ணன் அவர்கள் தமிழ்த் திரையுலகுக்கு அங்கதச்சுவைக்கான புது வாசலைத் திறந்துவிட்டவர் என்றால் அது மிகையாகாது. ‘அமைதிப்படை அதன் உச்சம்!

அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என்று இவர் கதை, உரையாடல் எழுதிய திரைப்படங்களோ என்றுமே நம் நினைவை விட்டு நீங்காத காவியப் படைப்புகள்!

இப்படி, படைப்பாளியாகச் சாதித்தவை போதாதென்று நடிகராகவும் இவர் பதித்த முத்திரைகள் ஏராளம்! அப்பாவாக நடித்தால் அப்பா, அண்ணனாக நடித்தால் அண்ணன், வில்லனாக நடித்தால் கிலியூட்டும் வில்லன் என்று தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் அந்தந்தக் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்தார் மணிவண்ணன்! இத்தனைக்கும், பெரும்பாலான படங்களில் இவர் கதாப்பாத்திரத்துக்குப் பெயரே இருக்காது. ஆனாலும், பெயரில்லாத அந்தக் கதாப்பாத்திரங்கள் நம்முள் ஏற்படுத்திய தாக்கம் மறக்க இயலாதது! அதற்குக் காரணம், அவருடைய வெகு இயல்பான உடல்மொழி. அப்பாவாக வந்தால், நம்முடைய அப்பா நம்மிடம் எப்படிப் பேசுவாரோ அதே உடல்மொழியில் பேசினார்; அண்ணன், குடும்ப எதிரி என அனைத்திலும் அப்படியே! நினைத்துப் பாருங்கள், ‘காதலுக்கு மரியாதை படத்தில் வரும் நண்பனின் அப்பாவையோ, ‘முகவரி படக் கடைக்கார அண்ணனையோ என்றைக்காவது நம்மால் மறக்க முடியுமா?

பெரிய கதாநாயகர்களின் படங்களில் கூட, அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் அந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தால் எப்படியிருக்கும் என நம்மால் ஓரளவுக்குக் கற்பனை செய்து பார்க்க முடியும். ஆனால், மணிவண்ணன் அவர்களின் கதாபாத்திரங்களில் அவருக்குப் பதிலாக மற்றொருவரை நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது! அதுதான் மணிவண்ணனின் சிறப்பு! எனக்குத் தெரிந்து, பழம்பெரும் நடிகர் பாலையா அவர்களுக்குப் பிறகு, மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த குணச்சித்திர நடிகர் மணிவண்ணனாகத்தான் இருப்பார்!

“அட இதெல்லாம் எங்களுக்குத் தெரியாததா என்ன? தலைப்பில் ஏதோ பாப்லோ நெருடாவையெல்லாம் வம்புக்கிழுத்திருக்கிறாயே, அது என்ன சங்கதி? என்கிறீர்களா? பொறுங்கள் பொறுங்கள்! அடுத்து அதைத்தான் சொல்ல வருகிறேன்.

மணிவண்ணனை விடத் திறமையான படைப்பாளிகள், சிறப்பான கலைஞர்கள் தமிழ்த் திரையுலகில் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால், அவரைப் போல உண்மையான கலைஞர்கள் இருக்கிறார்களா என்றால்... என் கண்களுக்குத் தென்பட்ட வரை அப்படி யாரும் இல்லை. (அண்ணன் சீமான், கவிஞர் தாமரை போன்றோர் விதிவிலக்குகள்).

ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், ஒரு கலைஞருக்குண்டான முதல் தகுதி ‘சமூகப் பொறுப்பு! அது வேறு யாருக்கு இருக்கிறதோ இல்லையோ கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் இருக்க வேண்டும்! காரணம், அவர்கள்தாம் சமூகத்துக்குக் கருத்து சொல்லும் இடத்தில் இருப்பவர்கள். உலகப் புகழ் பெற்ற படைப்பாளிகளான பாப்லோ நெருடா, பெர்னாட்ஷா முதலான பலரின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தி இது. இவர்கள் வெறும் படைப்பாளிகளாக மட்டும் தங்கள் வாழ்வைக் கழிக்காமல், தம் சிந்தனைகளையும் புரட்சிக் கருத்துக்களையும் தங்கள் படைப்புகளில் மட்டும் வெளிப்படுத்துபவர்களாக இல்லாமல் வெளியேயும் பேசினார்கள். தங்கள் சமூகமும், மக்களும் பாதிக்கப்பட்டபொழுது அதைக் கண்டித்து வெளிப்படையாகக் குரல் கொடுத்தார்கள். தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திச் சரியான தலைவரை மக்களுக்கு அடையாளம் காட்டினார்கள்.

உண்மையான கலைஞருக்குண்டான இந்தப் பண்புகளை, அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது கொண்டிருந்த ஒரே தமிழ்க் கலைஞர் மணிவண்ணன் அவர்கள்! அண்மையில், தமிழீழம் கோரித் தமிழ்நாடு முழுவதும் இளைஞர் படை கொந்தளித்து எழுந்தபொழுது, காலம் காலமாகத் தமிழ், தமிழ் எனப் பேசிக்கொண்டிருக்கும் கமலோ, உலகத் தரம் மிகுந்த சமூக அக்கறைப் படங்களைத் தொடர்ந்து வழங்கும் ஷங்கரோ, சமூக நலன் சார்ந்த படங்களை எடுப்பதில் முன்னோடியான பாலசந்தரோ, இந்த மண்ணின் இயக்குநர் எனப் புகழப்படும் பாரதிராஜாவோ... யாருமே வாய் திறக்காத அந்தச் சூழ்நிலையில் முதல் ஆளாக முன்வந்து அந்த மாணவப் புலிகளை ஆதரித்தார் மணிவண்ணன்.

தொலைக்காட்சிகள், இன்ன பிற பொதுமேடைகள் என்று அனைத்திலும் மாணவர்களின் இந்தப் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்துப் பேசினார்! அவர்களின் போராட்டமுறைகளில் இருந்த சிறு சிறு குறைகளை எடுத்துச் சொல்லி, முன்னோடி என்ற முறையில் அவர்களுக்கு வழிகாட்டினார்! மேலே நாம் பார்த்த மேல்நாட்டுப் படைப்பாளிகளைப் போல் சமூகப் பொறுப்புள்ள உண்மையான கலைஞராகத் தன் கடமையை நிறைவேற்றினார்!

இப்பொழுதுதான் என்றில்லை, எப்பொழுதுமே மணிவண்ணன் இப்படித்தான். இன்றைக்குப் போலில்லாமல், தமிழ்ப் பற்றாளர்கள் என்றாலே கருணாநிதி ஆதரவாளர்கள்தான் என்ற நிலைமை உலகத் தமிழ்ச் சமூகமெங்கும் நிலவிய தொண்ணூறுகளிலேயே கருணாநிதிக்கு மாற்றாக வை.கோ-வை அடையாளம் காட்டியவர் மணிவண்ணன்! அதன் பிறகு, இன்றைய சூழலுக்கான சரியான அரசியல் தேர்வாகச் சீமானை இனங்காட்டவும் அவர் தவறவில்லை!

இப்படி, சிறப்பான படைப்பாளியாக, அருமையான நடிகராக, உண்மையான கலைஞராகத் திகழ்ந்த மணிவண்ணன் இடையில் உடல்நலம் குன்றியிருந்த சிலகாலம் தவிர, கடைசி வரை திரையுலகிலும், அரசியலிலும் இயங்கிக் கொண்டிருந்தார். இளைஞர்களுக்கான அரசியல் வழிகாட்டியாக இன்னும் அவருடைய தேவை தீர்ந்தபாடில்லை. இப்படிப்பட்ட நிலையில் அவர் மறைந்திருப்பது தமிழ்ச் சமூகத்துக்கு உண்மையிலேயே பெரிய இழப்பு!

அவரைப்போலவே உணர்வுள்ள தமிழராக, உண்மையான கலைஞராக, சமூகப் பொறுப்புள்ள படைப்பாளியாக வாழ்வதும், ஈழப் பிரச்சினை முதலான தமிழர் பிரச்சினைகளில் அவர் காட்டிய வழியைக் கடைப்பிடிப்பதும்தான் அந்தச் சிறந்த மனிதருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்!

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

முகநூல் வழியே கருத்துரைக்க

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தொடர...

மின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓

அனுப்புநர்:FeedBurner

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

கூகுள்+ அகத்தில்...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

அ.தி.மு.க (7) அஞ்சலி (18) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (62) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (24) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (19) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (2) இனப்படுகொலை (12) இனம் (45) ஈழம் (33) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (10) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (7) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (16) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (9) தமிழர் (32) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (1) தாலி (1) தி.மு.க (3) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (6) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (1) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (16) வாழ்க்கைமுறை (12) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)

அகமார்ந்தோர் பதிவேடு

முகரும் வலைப்பூக்கள்